Posts Tagged ‘பணம்’

பல பெயர்களில், பல உருவங்களில், பல இயக்கங்களுடன் தொடர்புகள் வைத்து வன்முறை, கொலை-கொள்ளை என்று தீவிரவாதத்தை வளர்ந்து வரும் மாவோயிஸ்டுகள்!

ஒக்ரோபர் 4, 2016

பல பெயர்களில், பல உருவங்களில், பல இயக்கங்களுடன் தொடர்புகள் வைத்து வன்முறை, கொலை-கொள்ளை என்று தீவிரவாதத்தை வளர்ந்து வரும் மாவோயிஸ்டுகள்!

palanivel-maoist-arrest-dinakaran-cutting

2008ல் கொடைக்கானலில் நவீன்பிரசாத் சுட்டுக் கொல்லப்படல்[1]: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைவாழ் மக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்த வழக்கில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் மாவோயிஸ்ட்டிடம் 2 நாள்கள் விசாரணை நடத்த திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது. கடந்த 2008 ஆம் ஆண்டு, கொடைக்கானல் மலைப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கான பணியில், நவீன்பிரசாத் உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுகள் ஈடுபட்டு வந்தனர்.   இதுகுறித்து தகவலறிந்த க்யூ பிரிவு போலீஸார் அங்கு சென்ற போது, இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், நவீன்பிரசாத் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். 7 ஆண்டுகளுக்குப் பின், தப்பி ஓடியவர்களில் கண்ணன் என்ற செந்தில் என்ற குமார் என்ற மின்னல் (46), அ.நீலமேகம் என்ற கதிர் என்ற விநாயக் (30) ஆகியோர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர்[2].

maoists-arrested-in-forest-areasதே.பா. சட்டத்தில் கைதான மாவோயிஸ்டுகள் 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன் (ஜனவரி 2016): கோவையை அடுத்த கருமத்தம்பட்டி-அன்னூர் சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் வைத்து,  கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மல்லபள்ளியை சேர்ந்த ரூபேஷ் (43), அவருடைய மனைவி சைனா (37), திருச்சூரை சேர்ந்த அனூப் (40), மதுரையை சேர்ந்த கார்த்தி என்ற கண்ணன் (39), கடலூரை சேர்ந்த ஈஸ்வரன் என்ற வீரமணி (42) ஆகியோரை, கடந்த ஆண்டு 2015 மே 4ம் தேதி காவல்துறையினர் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்[3]. இந்த நிலையில், மாவோயிஸ்டுகள் 5 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கியூ பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இது தொடர்பாக கியூ பிரிவு காவல்துணை துணை கண்காணிப்பாளர் சேதுபதி அளித்த பரிந்துரையை ஏற்று மாவட்ட கலெக்டர், மாவோயிஸ்டுகள் 5 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதனால், அவர்கள் ஒரு ஆண்டுக்கு ஜாமீனில் வர முடியாத நிலை ஏற்பட்டது.இந்த நிலையில், மாவோயிஸ்டுகள் 5 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியதோடு, கியூ பிரிவு காவல்துறையினர் முன் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டது[4].

arundhati-roy-with-maoists

24-07-2016 ஞாயிறன்று கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் மகாலிங்கம்: ஜாமீனில் வெளிவந்து தலைமறை வான மாவோயிஸ்ட் மகாலிங்கம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளத்தில் 24-07-2016 ஞாயிறன்று கைது செய்யப்பட்டார்[5]. 25-07-2016 திங்கட்கிழமையன்று காலை, ஆண்டிபட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் பாஸ்கரன் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை மகாலிங்கத்தை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை மத்திய சிறையில் மகாலிங்கம் அடைக்கப்பட்டார்[6]. சேலத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் க்யூ பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், வருசநாடு வனப்பகுதியில் பதுங்கியிருந்து ஆயுதப் பயிற்சி எடுத்த மாவோயிஸ்ட்களான மகாலிங்கம்,62. முருகானந்தம், மருது, லோகேஷ், பாலமுருகன் ஆகிய 5 பேரை, கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி தேனி கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்கள் ஆண்டிபட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் ஜாமீன் பெற்று தலைமறைவானார். இவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஆண்டிபட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. மகாலிங்கத்தை தேடும் பணியில் கியூ பிரிவு போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b0%e0%af%80%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%9c%e0%ae%be%e0%ae%afஎருமையூரில் பிடிபட்ட மாவோயிஸ்ட் ரீட்டா ஜாய்ஸ் மேரி (செப்டம்பர் 2016)[7]: கைது செய்யப்பட்ட இரண்டு பெண் மாவோயிஸ்டுகளில் ஒருவரான சந்திராவை வரும் அக்டோபர் 10-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கரூரில் சந்திரா, கலா என்ற பெண் மாவோயிஸ்ட்களை போலீஸார் கடந்த சில தினங்களுக்கு முன்பு செப்டம்பர் 10/11 தேதிகளில் கைது செய்தனர்[8]. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் எருமையூரில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து அங்கு வீட்டில் தங்கியிருந்து கல்குவாரில் ஒன்றில் வேலை செய்து வந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர் தப்பியோடிவந்த மாவோயிஸ்ட் ரீட்டா ஜாய்ஸ் மேரி (42) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து க்யூ பிரிவு போலீஸார், அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் அவ்வப்போது கேரளம், கர்நாடக மாநிலங்களின் மலைப் பகுதிக்கு சென்று, அங்கு பதுங்கியிருக்கும் மாவோயிஸ்ட் இயக்கத்தினரை சந்தித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதில் ரீட்டா ஜாய்ஸ் மேரி, மதுரையைச் சேர்ந்தவர். சந்திரா, கலா ஆகியோர் கரூரைச் சேர்ந்தவர்கள்.

maoists-different-facadesஆள்கொணர்வு மனுவை நிராகரித்து, தள்ளுபடி செய்தது (அக்டோபர் 2016): சென்னை உயர்நீதி மன்றம் ரூபேஷ் சார்பில் தொடுக்கப்பட்ட ஆள்கொணர்வு மனுவை நிராகரித்து, கீழ்கண்ட மாவோயிஸ்டுகளை அரசு பிடித்து வைத்திருப்பதை உறுதி செய்தது[9]:

  1. ஆர். ரூபேஷ் / பிரஷாந்த் / பிரவீன் / பிரகாஷ் / ரூபின் / கரியன் [ Roopesh alias Prasanth alias Praveen alias Prakash alias Ruban alias Kariyan (45)].
  2. சைனா / சைனி / ஷோபா / ராஜி [Shyna alias Shyni alias Shoba alias Rajee (42)].
  3. எஸ். கண்ணன் / செந்தில் / குமார் / மின்னல் [ Kannan alias Senthil alias Kumar alias Minnal (46)],
  4. சி. வீரமணி / நடராஜ் / சுனில்குமார் / சாரா / ஈஸ்வர் / வஜ்ரமணி / ரிஸ்வான் [ Veeramani alias Natraj alias Sunilkumar alias Sara alias Eswar alias Vajramani alias Riswan (60)].
  5. அனுப் மாத்யூ ஜார்ஜ் [Anup Mathew George (32)].

இவர்களது இயக்கம் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டுள்ளவற்றைத் தடுக்கும் சட்டப் பிரிவின் [under Section 35(1) of the Unlawful Activities (Prevention) Act, 1967] கீழ் தடை செய்யப்பட்டிருப்பதாலும், இவர்களும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாலும், அது அவசியமாகிறது என்று ஆள்கொணர்வு மனுவை நிராகரித்து, தள்ளுபடி செய்தது[10].

© வேதபிரகாஷ்

04-10-2016

nilgiris_1_regiona_maoist-different-facade

[1] தினமணி, பெண் மாவோயிஸ்ட் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்: 2 நாள்கள் விசாரணை நடத்த போலீஸாருக்கு அனுமதி, By திண்டுக்கல், First Published : 27 August 2016 12:26 AM IST

[2]http://www.dinamani.com/edition_madurai/dindigul/2016/08/27/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2/article3598668.ece

[3] விகடன், தே.பா. சட்டத்தில் கைதான மாவோயிஸ்டுகள் 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன்!, Posted Date : 16:10 (21/01/2016); Last updated : 17:56 (21/01/2016).

[4] http://www.vikatan.com/news/tamilnadu/57942-five-maoists-conditional-bail-madras-high-court.art

[5] தமிழ்.ஒன்.இந்தியா, கேரளாவில் கைதான மாவோயிஸ்ட் மகாலிங்கம்: சேலம், தர்மபுரியில் மாவோயிஸ்ட்டுகள் தேடுதல் வேட்டை, By: Mayura Akilan, Published: Tuesday, July 26, 2016, 18:16 [IST].

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/suspected-maoist-judicial-custody-258871.html

[7] தமிழ்.ஒன்.இந்தியா, கரூரில் சிக்கிய பெண் மாவேயிஸ்ட்டுக்கு காவல் நீட்டிப்பு.. திருச்சி சிறையிலடைப்பு!, By: Essaki, Updated: Wednesday, September 14, 2016, 20:08 [IST].

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/karur-court-custody-extension-maoists-chandra-262792.html

[9] The Hindu, HC confirms detention of 5 suspected Maoists under NSA, MADURAI, October 4, 2016; Updated: October 4, 2016 07:47 IST

[10] http://www.thehindu.com/news/cities/Madurai/hc-confirms-detention-of-5-suspected-maoists-under-nsa/article9180855.ece

தமிழகத்தில் நக்சலைட்டுகள் கைது – மாவோவிஸ்டுகளின் நடமாட்டம், ஆயுத பயிற்சி, வெளிப்படுத்தும் நிலைமை!

ஒக்ரோபர் 3, 2016

தமிழகத்தில் நக்சலைட்டுகள் கைது – மாவோவிஸ்டுகளின் நடமாட்டம், ஆயுத பயிற்சி, வெளிப்படுத்தும் நிலைமை!

%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%8d

சேலம் அருகே நக்சலைட் பிடிபட்டது 30-09-2016: தஞ்சாவூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 1920-40களில் கம்யூனிஸ்டுகளால் ஆரம்பித்து வைக்கப் பட்ட ஆயுத போராட்டம், 1949-50களில் நிறுத்தி விட்டதாக அறிவிக்கப் பட்டாலும், சிபிஐ. சிபிஎம், சோசியலிஸ்ட் யூனியன், சிபிஎம்எல் ன்றெல்லாம் பிரிந்து வேலை செய்தன. 1952 தேர்தலில், கம்யூனிஸ்டுகள் இரண்டாவது பிரதான கட்சியாக வந்தது. தமிழகத்தில் எதிர்கட்சியாக செயல்பட்டது. இருப்பினும், தீவிரவாத கம்யூனிஸ்டுகள் ஆயுத போராட்டத்தை நிறுத்தவில்லை. 30-09-2016 அன்று ரு நக்சலை பிடிபட்டது தைத்தான் காட்டுகிறது. சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள பள்ளிகுடத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் என்பவரது மகன் பழனிவேல் (வயது 36).  பழனிவேல் நண்பர்கள் கமிட்டி என்ற குழுவை அமைத்து, மாரியம்மன் திருவிழாக்களின் போது நிகழ்ச்சிகளை நடத்தி வந்தான். அப்பொழுது, குப்புசாமி மற்றும் சுந்தரராஜன் இருவரும், இவனுடைய அனுமதி பெறாமல், அவனுக்குத் தெரியாமல், அதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தினர்.  இதனால், ஜூலை 2003ல், பழனிவேல் மற்றும் அவனுடைய கும்பலால், இவ்விருவரும் படுகொலை செய்யப்பட்டனர்[1]. இதில் மொத்தம் 24 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

july08

july08

2007ம் ஆண்டு துப்பாக்கி வழக்கு: ஜூலை 2007ல் சுந்தரமூர்த்தி என்ற மாவோயிஸ்ட் கட்சி தலைவர் [State Secretary of the CPI (Maoist) Sundaramoorthy] கைது செய்யப்பட்டபோதும், பழனிவேல் பெயர் அடிபட்டது[2]. பரமக்குடியைச் சேர்ந்த காளிதாஸ், செம்மணஹள்ளியைச் சேர்ந்த நவீன் பிரசாத், சேலத்தைச் சேர்ந்த ராஜா அல்லது விவேக், கார்த்தி, பெரியசாமி, வேல்முருகன், பழனிவேல் முதலியோர் பிடிபட்டனர்[3]. அந்நேரத்தில் துப்பாக்கி வைத்திருந்ததற்காக வழக்குத் தொடரப்பட்டது. இவர்களுக்கு மாநில எல்லைகள் எல்லாம் இல்லாமல் இருக்கிறது. இங்கு வெறும் துப்பாக்கி என்பதில்லை, ஆயுதங்கள் அவர்களுக்கு எப்படி கிடைக்கிறது என்பது தான் கேள்வி.

23-1469271578-maoists-karurபழனிவேலின் ஒரிஸா தொடர்பு: மாவோயிஸ்ட் இயக்கத்தால் [the Communist Party of India (Marxist-Leninist)] ஈர்க்கப்பட்டு கடந்த 2007-2008-ம் ஆண்டுகளில் ஒடிசா மாநிலத்திற்கு சென்று ஆயுதப் பயிற்சி பெற்றார்[4]. அவ்வப்போது, ஒரிசாவுக்கு சென்று அங்குள்ள நக்சலைட்டுகளை சந்தித்து வந்தார்[5]. இதை தொடர்ந்து ஒரிசா போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்[6]. அஙகு காவல்நிலையம் மற்றும் ரயில் நிலையம் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த போது, 2009-ம் ஆண்டு பெரியகுளம் முருகமலையில் ஆயுதப்பயிற்சி அளித்ததாக பழனிவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது[7]. ஐந்து மாதங்களுக்கு முன் கேரளாவில் நடைபெற்ற வனத்துறை அலுவலகம், காவல்நிலையம் மீதான தாக்குதலில் இவருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

anti-naxal-driveபழனிவேல் மீதுள்ள பல வழக்குகள்: நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. 2003-ம் ஆண்டு ஜூலை 15-ந் தேதி 22 பேர் கொண்ட நக்சலைட் கும்பல், எதிர் இயக்கத்தை சேர்ந்த குப்புசாமி, சுந்தர்ராஜன் ஆகிய 2 பேரை கொன்ற வழக்கில் பழனிவேலை போலீசார் கைது செய்தனர்[8]. ஜாமீனில் விடுதலையான இவர் 2006-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துவந்தார்[9]. அவரை பிடிக்க கோர்ட்டு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தது. பழனிவேல் மீது திருப்பத்தூரில் வெடிகுண்டு வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. ஒடிசா நக்சலைட் இயக்கத்தினருடனும் பழனிவேலுக்கு தொடர்பு இருந்தது. அவர், கடந்த சில ஆண்டுகளாக கேரள நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவர்களுடன் இணைந்து கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் பதுங்கி இருந்தார். கேரள வனத்துறையினர் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கேரள போலீசாரும் அவரை தேடிவந்தனர்.

maoist_india_map_2009102630-09-2016 அன்று கைது: அதே சமயம், தமிழக கியூ பிரிவு போலீசாரும் தனிப்படை அமைத்து பழனிவேலை பல இடங்களில் தேடிவந்தனர். இவர்களின் தேடுதல் வேட்டையில் 3 நாட்களுக்கு முன் பழனிவேல் சொந்த ஊருக்கு வந்து சென்றது தெரியவந்தது. அவர் எங்கு சென்றார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர் மேட்டூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. கியூ பிராஞ்ச் போலீசார் வெள்ளிக்கிழமை [30-09-2016] இரவு மேட்டூருக்கு சென்று அங்கு கட்டிட வேலை நடக்கும் இடத்தில் பதுங்கியிருந்த பழனிவேலை சுற்றிவளைத்து கைது செய்தனர்[10]. அவர் மீது கூட்டு சதி, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேட்டூர் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பழனிவேலை, கேரள போலீசாரும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர்.

%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%8b-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8dகேரள தொடர்புகள்: கேரள நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த ரூபேஷ், சைனி உள்ளிட்ட 5 பேர், கோவை கருமத்தம்பட்டி பகுதியில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்[11]. இவர்களுடனும் பழனிவேலுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. நக்சலைட் இயக்க தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதால், கேரளாவில் அந்த இயக்கத்தை வலுப்படுத்த பழனிவேல் பல்வேறு நடவடிக்கைகைளை மேற்கொண்டு வந்ததாக தெரிகிறது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள பழனிவேலை, கேரள போலீசாரும் காவலில் எடுத்து விசாரிக்க திட்ட மிட்டு உள்ளனர்[12].

ramachandra-guha-pucl-etcPUCL ஆதரவு: 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நக்சலைட் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தங்கியிருந்து கொண்டு, மேட்டூரில் பெயிண்டிங் வேலை பார்ப்பது போல் வந்து நக்சலைட் இயக்கத்திற்கு ஆட்களை சேர்த்து வந்துள்ளார். இதை அறிந்த நாங்கள் அவரை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்துள்ளோம், என்றனர். வழக்கம் போல, PUCLன் வழக்கறிஞர், எஸ். பாலசுப்ரமணியம், 24 மணி நேரத்திற்கு மேலாக, இவனை பிடித்து வைத்திருப்பது, சட்டத்திற்கு புறம்பானது என்று வாதிடுகிறார்[13]. அது சரி, கொலை செய்யப்பட்ட அவ்விருவரைப் பற்றி இவர் ஒன்றும் நினைத்துப் பார்க்கவில்லை போலும்.

© வேதபிரகாஷ்

03-10-2016

[1] Palanivel and his friends had floated a business venture called ‘Friends Committee’, which organised programmes in the village during the Mariamman temple festival. Meanwhile, Kuppusamy and Sundararajan, also CPI (ML) members, started using Palanivel’s company name to hold temple functions with out his consent. On July 2003, the duo was beaten to death by Palanivel and his accomplices.

[2] The Hindu, Police step up hunt for three more naxalite leaders, July 12, 2007.

[3] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/police-step-up-hunt-for-three-more-naxalite-leaders/article1871447.ece

[4] தினகரன், மேட்டூரில் மாவோயிஸ்ட் முக்கிய தளபதி கைது செய்யப்பட்டதால் பரபரப்பு, Date: 2016-10-02@ 12:52:12

[5] மாலைமலர், சேலம் அருகே நக்சலைட்டு கைது, பதிவு: அக்டோபர் 02, 2016 12:40.

[6] http://www.maalaimalar.com/News/TopNews/2016/10/02124053/1042685/Salem-near-Naxalite-arrest.vpf

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=249628

[8] தினத்தந்தி, 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நக்சலைட் கைதுகியூபிரிவு போலீசின் தேடுதல் வேட்டையில் சிக்கினார்,, பதிவு செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 03,2016, 12:22 AM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 03,2016, 3:15 AM IST.

[9] http://www.dailythanthi.com/News/State/2016/10/03002207/Naxalite-arrested-were-hiding-for-10-years.vpf

[10] தினத்தந்தி, மேட்டூர் அருகே 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நக்சலைட் அதிரடி கைதுகியூபிரிவு போலீசின் தேடுதல் வேட்டையில் சிக்கினார், பதிவு செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 03,2016, 11:18 AM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 03,2016, 11:18 AM IST

[11] http://www.dailythanthi.com/News/Districts/Salem/2016/10/03111845/For-10-years-near-MetturAbsconding-Naxalite–Action.vpf

[12] Times of India, Wanted Maoist, who jumped bail, arrested in Salem, TNN | Updated: Oct 3, 2016, 04.22 AM IST.

[13] “Illegal detention or illegal custody is an offence and Q branch police should produce the suspects within 24 hours before the court,” said S Balamurugan, national council member of People’s Union for Civil Liberties(PUCL).

http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Wanted-Maoist-who-jumped-bail-arrested-in-Salem/articleshow/54647460.cms

பணக்கட்டுகளை மெத்தையில் போட்டு படுத்து, சுகித்த மார்க்ஸ்சிஸ்ட் சிந்தாந்தி, கம்யூனிஸ்ட் வேதாந்தி, பொதுவுடமை சூத்ரதாரியை தண்டிக்க வேண்டும் என்று கிளம்பியுள்ள காம்ரேடுகள்!

ஒக்ரோபர் 20, 2013

பணக்கட்டுகளை மெத்தையில் போட்டு படுத்து, சுகித்த மார்க்ஸ்சிஸ்ட் சிந்தாந்தி, கம்யூனிஸ்ட் வேதாந்தி, பொதுவுடமை சூத்ரதாரியை தண்டிக்க வேண்டும் என்று கிளம்பியுள்ள காம்ரேடுகள்!

Baby Sleeping on money bed-dreaming

பணப்படுக்கையில் புரளுவது காம்ரேடுகளை உருத்துவது ஏன்?: கார்ல் மார்க்ஸ் சித்தாந்தத்தை என்னதான் கரைத்துக் குடித்திருந்தாலும் மார்க்சிஸ்ட்களும் மனிதர்கள்தான்[1], என்பதைவிட, மூளைசலவை செய்யப் பட்ட சித்தாந்திகள் என்பதால், எலியைக் கண்ட பூனை போல பாய்கின்றனர். எலி முதலாளித்துவத்தைச் சேர்ந்தது அதனை கண்டு கொள்ளாதே என்றாலும், எலியின் வாசனை, பூனையை மயக்கத்தான் செய்யும், இழுக்கத்தான் செய்யும். எனவே காம்ரேடுகள் பார்த்து பதறுவது, அவர்களது குட்டு வெளிப்பட்டு விட்டதே என்பதற்காகத்தான். என்றுமே பணம் வேண்டாம் என்று சொன்ன தொழிலாளியும் இல்லை, கம்யூனிஸ்டும் இல்லை. கம்யூனிஸ இளைஞர்-இளைஞிகள் “செகுவேரா” பனியன்கள் அணிந்து கொண்டு உண்டிகள் குலுக்குவதே காசு சேகரிப்பதற்குத்தான்.

1000 Currency Bed CPM way

ஒழுக்கக் கேடான விஷயம், கடுமையான தண்டனை வழங்க வேண்டிய குற்றம்: ஒழுக்கக்கேடான விஷயம். கடுமையான தண்டனை வழங்க வேண்டிய குற்றம் என்று மாநில சி.பி.எம் செயலாளர் கொதிப்பதில் ஒன்றும் விசயமில்லை, ஏனெனில் கம்யூனிஸத்தில் ஒழுக்கம் என்பதே இல்லை. எல்லாமே பொதுவுடமை, சொத்து, குடும்பம், குழந்தைகள் கூடாது எனும் போது, ஆனால், அவற்றையெல்லாம் வைத்துக் கொண்டுள்ள நிலைகளில் எதை அவர்கள் ஒழுக்கம் என்பார்கள் என்று அவர்கள் தாம் விளக்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் திருமணம் செய்து கொள்கிறார்கள், குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள், சொத்துகளையும் சேர்த்து வைத்துக் கொள்கிறாற்கள். பிறகென்ன, ஒழுக்கம் என்ற பேச்செல்லாம் என்று தெரியவில்லை.

Currency Bed CPM way

சமர்ஆச்சார்ஜியின்கனவுஎன்றுதிரிபுவாதம்செய்து, அவரைப்பலிக்கடாவாக்ககம்யூனிஸ்ட்டுகள்முயல்கிறார்கள்: திரிபுரா நகர சி.பி.எம் குழு உறுப்பினரான, அவர், ‘ரொம்ப நாளாக ஒரு கனவு. பணத்தையே படுக்கையாக்கி அதில் விழுந்து புரள நினைப்பேன். இப்போதுதான் நிறைவேறி இருக்கிறது’ என்கிறதில் தான் உண்மை வெளிப்படுகிறது. மற்ற காம்ரேடுகளும் அவ்வாறே செய்திருப்பர் ஆனால், வெளியே சொல்லவில்லை, காண்பித்துக் கொள்ளவில்லை.  பிரகாஷ் காரத் மற்றும் பிருந்தா காரத் அமெரிக்காவிற்கு சுற்றுலா செல்வது, கிருஸ்துமஸ் விடுமுறையின் போது ஓய்வு எடுப்பது போன்றதெல்லாம், அத்தம்பதியினருக்கு மட்டுமல்ல, திருமணமான காம்ரேடுகள் அனைவருக்கும் பொறுந்தும். அவரவர்கள், அவரவர் வசதிகளுக்கெ ஏற்ப படுக்கைகளில் பணத்தை போட்டோ, பணத்தை கொடுத்தோ, செலவழித்தோ படுத்திருப்பர். அதனால், இந்த தோழரை மட்டும் ஒழுங்கில்லை என்று சொல்ல வேண்டிய அவசியத்தை, மற்ற செங்கொடி காம்ரேடுகள் தாம் விளக்க வேண்டும்.

Communist Red Parivar Sex

செங்கொடித் தோழரிடம் எப்படி பணம் வந்தது என்று போலித்தனமாகக் கேட்க வேண்டிய அவசிய்டம் இல்லை:  ‘மனிதர்கள் அடித்துக் கொள்ள பணம்தான் காரணம்; ஆகவே பணத்தை வெறுக்கிறேன்’ என்று மார்க்ஸ் சொன்னதெல்லாம், சித்தாந்தத்திற்குதான். மார்க்ஸிற்கே பணம் இருந்ததால் தான், அத்தகைய புக௳, பிரச்சாரம் எல்லாம் கிடைத்தது. கால மாற்றத்தின் மூலம் மட்டுமல்ல, கம்யூனிஸ திரிபுவாதங்கள், போலி கம்யூனிஸவாதங்கள், துரோகி-கம்யூனிஸ்டுகள் என்றெல்லாம் அவர்களே அடையாளங்களைக் காட்டி வைத்ததால் தான், ரஷ்யா, சீனா, ஜெர்மனி என்று கம்யூனிச நாடுகள் வரிசையாக முதலாளித்துவத்துக்கு தமக்கேயுரிய சிவப்புக் கம்பளம் விரித்தன. இதனை இந்திய கம்யூனிஸ்டுகள் விடுதலைக்கு முன்னர் பச்சையாகவும் விடுதலைக்குப் பிறகு சிகப்பாகவும் செய்து வந்தனர், வருகிறாற்கள். இதெல்லாம் பழுத்த கம்யூனிஸ்ட் காம்ரேடுகளுக்கே நன்றாகத் தெரிந்த விசயம் தான். ஆகையால், ஏகாதிபத்திய நாடுகள் ஆச்சரியப்படும், வெட்கப்படும், திடுக்கிடும் அளவுக்கமொன்றும் ஆகிவிடவில்லை. வாங்கும் சம்பள கவரை கட்சி ஆபீசில் கொடுத்துவிட்டு, குடும்பம் நடத்த கட்சி தரும் ஜீவனாம்சத்தை பெற்று வாழும் தோழர்கள் இன்னமும் இருக்கிறார்கள் போன்ற வாதங்கள் எல்லாம் பொய்யுண்மையான கம்யூனிஸத்தை அறிந்தவன் அவ்வாறு சொல்ல மாட்டான்.

Comrade Nallakkannu CPI

கம்யூனிஸ்டுகளின் போலித் தனம்: பொதுவுடமை பேசி ஏமாற்றி வந்துள்ள, வரும் இந்திய கம்யூனிஸ்டுகளோ, அக்கட்சியினரோ, தலைவர்களோ ஏழைகள் அல்லர், ஆனால், பெரிய பணக்காரர்கள், கோடீஸ்வரர்கள், மில்லியனியர்கள் கூட. வெளியில் பரதேசிகளைப் போல, பிச்சைக்காரர்கள் போல, ஏழைகள் போல, வேடதாரிகளாக உலாவி வருவர். ஆனால், வார இறுதியில், அவர்களது சொந்த வீடுகளுக்கு, பங்களாக்களுக்கு, பண்ணை வீடுகளுக்குச் சென்று, நன்றாக அனுபவித்து வருவர். அதனால் தான், பொதுவாக கம்யூனிஸ்டுகள் தங்களது காம்ரேடுகளைக் கூட, தங்களது வீடுகளுக்கு அழைத்துப் பேச மாட்டார்கள், ஆனால், கட்சி அலுவலகங்களில் வைத்துப் பேசுவார்கள். இன்றைய நிலையில், காங்கிரஸுக்குப் பிறகு, கம்யூனிஸ்டுகளுக்குத் தான் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன[2]. அதேபோல, கம்ன்யூனிஸ்ட் தலைவர்கள், மந்திரிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள், வட்டங்கள், மாவட்டங்களும் அப்படியே. கோடிகளில் ஒரு கம்யூனிஸ்ட் தான், உண்மையான கம்யூனிஸ்ட்டாக இருக்கிறான்.

Communist manifesto on raping

தாராளமயமாக்க ம்தனியார்மயமாக்கம்– உலகமயமாக்கம் கம்யூனிஸ்ட் காம்ரேடுகளின் முகமூடிகளைக் கிழித்ததன: தாராளமயமாக்கம்-தனியார்மயமாக்கம்-உலகமயமாக்கம் என்ற பொருளாதாரக் கொள்கைகள் வந்தவுடன், கம்யூனிஸ்ட்டுகளின் முகமூடிகள் கிழிந்து, அவர்களது முதலாளித்துவ முகங்களைக் காட்டிக் கொடுத்து விட்டது. பொருளாஹாரக் கொள்கைகளை எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்ளும் அவர்கள் தாம் விவசாய, ஏழை, புறம்போக்கு நிலங்களை பணமுதலைகளுக்கு தாராளமாகக் கொடுத்துள்ளனர்[3]. அதற்குரிய லட்சங்கள்-கோடிகளையும் அள்ளியுள்ளனர். அதுமட்டுமல்லாது, இப்படி வேடங்கள் போட்டு, முதலீடு செய்பவர்களையும் மிரட்டி வந்ததால், வெளிநாட்டு ஊடகங்களும், அவர்களது இரட்டை வேடங்களை எடுத்துக் காட்டின[4].

russian-prostitutes

பொதுப்பெண்டிர் சங்ககாலத்தில் மட்டுமல்ல, இப்பொழுதும் உள்ளனர்!

முதலாளித்துவத்தை, குறிப்பாகஅமெரிக்கமுதலாளித்துவத்தைஆதரித்தகம்யூனிஸ்டுகள்: 1980களில் கம்யூனிஸ்டுகளின் கொள்கைகள் தளர ஆரம்பித்தன. தாராளமயமாக்கம்-தனியார்மயமாக்கம்-உலகமயமாக்கம் அமூலுக்கு வந்த பிறகு, அவர்கள் கம்யூனிஸத்தை, கேபிடலிஸமாக சொல்வதற்கு தயாராகி விட்டார்கள்[5]. தங்களது இணைதளங்களில் மற்ற ஊடகங்களில் மேற்கு வங்காளம் அமெரிக்க முதலீடு செய்வதற்கு மிக உன்னதமான இடம் என்று வெளிப்படையாக விளம்பரங்கள் கொடுத்தனர். ஒரு நிலையில் கம்யூனிஸ்டுகளை விமர்சனம் செய்தபோது, “நாங்கள் ஒன்றும் கம்யூனிஸத்தை நீர்த்து விடவில்லை, சீன-மாதிரி-பொருளாதார முறையைத்தான் பின்பற்ருகிறோம்”, என்று சப்பைக் கட்டினர். 2000களிலேயே, புத்ததேவ் பட்டாச்சார்யா பொருளாதார மாற்றங்களுக்கு இடம் கொடுத்து விட்டார். “நாங்கள் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்கிறோம்”, என்று மெழுகு பூசி, முதலாளிகளிடம் பேரம் பேசினார்[6]. அசீம் பிரேம்ஜி, டாடா என்று பல முதலாளித்துவ தொழிலதிபர்களிடம் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், 100% ஏற்றுமதி உற்பத்தி மையங்கள் என்று வர ஆரம்பித்தன.

AIDS-in-Russia

AIDSம் பொதுவுடமை  சித்தாந்தத்தில் வேலை செய்கின்றது!

கல்கத்தாவில், இல்லை, கொல்கொத்தாவில் அமெரிக்கப் பொருட்கள் எல்லாமே கிடைக்கின்றன. Prakash-Yachuri-Coca-colaஏதோ டாடா நேனோ காருக்கு நிலம் கொடுத்து கம்யூனிஸ்ட்டுகள் 2006ல் மாட்டிக் கொண்டனர் என்று நினைக்க வேண்டாம். அதற்கு முன்பாக அவர்கள் ஆண்ட காலங்களில் – சுமார் 35 வருடங்கள், அவர்கள் தாம் தொழிற்துறை, வணிகத்துறை, வங்கித்துறை, நிதித்துறை, சிறுதொழிற்துறை, குறுந்தொழில் மேம்பாடு என்று பற்பல பதவிகளில் இருந்துள்ளனர், இன்னும் – ஆட்சி மாறினாலும் – இருந்து கொண்டிருக்கின்றனர்.  ஆனால், இவர்கள் மற்றவர்களை வார்த்தை ஜாலங்களில் தூஷித்துக் கொண்டிருப்பர்[7]. தொழிலாளர்களின் நண்பன், உழைப்பாளிகளின் உன்னத தோழன் என்றெல்லாம் தம்பட்டம் அடித்து வந்த காம்ரேட்கள், வேலைநிறுத்தம், அடாவடித்தனம் செய்தவர்களைக் கடுமையாக அடக்கியது[8]. பொருளாதாரம் சீரழிந்ததால்[9], காம்ரேடுகள் பாதையை மாற்றிக் கொண்டனர்.

Crony Capitalism and Crony Communism1994ல் 1,493 வேலையாட்களை, தொழிலாளர்களை, உழைக்கும் தோழர்களை தண்டித்தது. அதில் இரு தொழிற்சங்க தலைவர்களும் அடங்குவர். இது கம்யூனிஸ்டுகளே, கம்யூனிஸ்டுகளின் மீது எடுக்கப் படும் நடவடிக்கைகள் ஆயிற்றே, ஆனால், செங்குருதி தோழர்கள் யஆரும் கண்டு கொள்ளவில்லையே. 1995ல் ஜோதிபாசுவின் கீழ் தங்களது பொருளாதாரக் கொள்கைகளை முதலாளித்துவ ரீதியில் மாற்றிக் கொண்டனர்[10]. அவர்களது சித்தாந்தங்கள் பொய்த்து விட்டதால், இணைதளங்களிலும்[11], மற்ற தேசிய-விரோத சித்தாந்திகள், கட்சிகள் இவற்றுடன் கூட்டு வைத்துக் கொண்டு, பொய்-பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். எப்பொழுதும், வேலையாட்கள், உழைப்பாளிகள், என்று பேசி வருவதால், அத்தகையோர்களைக் கவர்ந்தாலும், போக-போக உண்மையினைத் தெரிந்து கொள்வதால், அவர்களுக்கே எதிரிகளாகி விடுகின்றனர். அப்பொழுதும் அத்தகைய கோபத்தை, வெறியை வெளிப்படுத்திக் கொள்ள தீவிரவாத அமைப்புகள் மூலம் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். கம்யூனிஸ்டுகளைப் பற்றி நன்றாக தெரிந்து வைத்துக் கொண்டதால், அவர்கள் முறைகளைப் பின்பற்றியே, மம்தா பானர்ஜி பதவிக்கு வந்து விட்டார். அவர் பின்பற்ருவது, கம்யூனிஸ முறைகள் தாம் என்பதால் தான், இந்த இரு கம்யூனிஸக் குழுக்களிடையே மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

Communists drink coca-colaகுரோனி கேபிடலிஸம் மற்றும் குரோனி கம்யூனிஸம்: அரசு மற்றும் பெரிய பண-டைனோசரஸ்கள், முதலாளித்துவ டைக்கூன்கள், முதலீட்டு முதலைகள் மற்றும் ஆதரிக்கும் அரசு, இவர்களுக்குள் இடையேயுள்ள சமந்தம், தொடர்பு மற்றும் இணைப்புகள் உள்ள நிலையினைத்தான் குரோனி கெபிடலிஸம் – “crony capitalism” என்று இன்று விவரிக்கிறார்கள். ஆனால், அதே வேலையைத்தான், கம்யூனிஸ்ட்-காம்ரேடுகள் செய்தார்கள், செய்து வருகிறாற்கள் ஆனால், சீதாராம் யெச்சூரி போன்ற வேடதாரிகள் மற்றவர்களை அவ்வாறு விமர்சிப்பது வேடிக்கையான விசயம்[12]. போதாகுறைக்கு, உபயோகமற்ற பொருளாதார விற்பன்னரான பிரதம மந்தியும், “குரோனி கேபிடலிஸம் மிகவும் ஆபத்தானது, ஆகவே, நாம் அதற்கு எதிராக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று பேசியிருப்பது[13] பெரிய ஜோக்குதான்! மன்மோஹன் சிங் செப்டம்பரில் பேசினால், உடனே டிசம்பரில் யச்சூரி பேசுகிறார். நன்றாக கூட்டுதான். இதனை குரோனி கம்யூனிஸம் – “Crony Communism”  என்று சொல்லலாமா? ஏனெனில், தோழர் பிரகாஷ் காரத் மே 2010லேயே, இதைப் பற்றி பேசிவிட்டார்[14]. அதுமட்டுமல்லாது, யு பி ஏ – II [United Progressive Alliance–II (UPA-II)] தான் அதற்கு காரணம்[15] என்றும் சொல்லிவிட்டார்!

Left of right or centre - women politicians togetherவாழ்க கம்யூனிஸம், பொதுவுடமை, எல்லாம்: உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள், ஒன்றாக சாபிடுவோம், ஒன்றாக இருப்போம், பொதுவாக எல்லாவற்றையும் வைத்துக் கொள்வோம் என்றெல்லாம் பேசுவது சகஜம் தான். ஆனால், காம்ரேடுகளே எல்லாவற்றையும் தனித்தனியாகத்தான் வைத்துக் கொண்டுள்ளனர் என்பதை, உழைக்கும் வர்க்கம், ரத்தத்தை வேர்வையாக சிந்தும் வர்க்கம் கண்டுகொள்ளவில்லை!

  • “செகுவேரா” பனியன்கள்காரர்கள் எல்லோரும் கம்யூனிஸ்டுகள் அல்லர்,
  • கம்யூனிஸ்டுகள் எல்லோரும் கம்யூனிஸ-ஒழுக்கமுள்ளவர்கள் அல்லர்,
  • டீ-குடிப்பவர்கள் எல்லோரும் கற்பழிப்பாளர்கள் அல்லர்,
  • கற்பழிப்பாளர்கள் எல்லோரும் டீ-குடிப்பவர்கள் அல்லர்
  • கம்யூனிஸ்டுகள் எல்லோரும் “செகுவேரா” பனியன்கள்காரர்கள் அல்லர்,
  • “செகுவேரா” பனியன்கள்காரர்கள் எல்லோரும் உண்டி குலுக்குவதில்லை,
  • உண்டி குலுக்குபவர்கள் எல்லோரும் “செகுவேரா” பனியன்கள்காரர்கள் அல்லர்!

© வேதபிரகாஷ்

20-10-2013


[2] The Congress is the richest political party in India, followed by rival Bharatiya Janata Party, reveals data collected by think-tanks Association for Democratic Reforms and National Election Watch. The think-tanks said that even though donations formed a bulk of the income of the political parties, very few of them revealed the sources of donations. In the last seven years, between financial years 2004-05 and 2010-11, Congress’ earning was Rs 2,008 crore, followed by the BJP with Rs 994 crore. Following the two national parties is the Bahujan Samaj Party with income, for this period, of Rs.484 crore, the Communist Party of India-Marxist Rs.417 crore and the Samajwadi Party Rs.279 crore. (These figures are the parties’ total income for the financial year 2010-11)

[6] He claims to remain a communist to his tobacco-stained finger-tips. Yet he admits that it is getting hard to know what that means. “The world is changing, communists are changing, even in China,” he says. “We are learning from our mistakes.” http://www.economist.com/node/10171275

[8] Political observers feel the Marxists no longer want to maintain their holier-than-thou facade. Last year, the party cracked down heavily on errant cadres. According to its 1994 scrutiny report, the CPI(M) penalised as many as 1,493 of its workers, including two powerful district-committee secretaries. Read more at: http://indiatoday.intoday.in/story/west-bengal-marxists-endorse-jyoti-basus-industrial-policy/1/288535.html

[13] “Crony capitalism is a danger that we must guard against” – Prime Minister Dr Manmohan Singhat an interactive session with a group of newspaper editors, September 6 2010.

[15] The unabashed pursuance of neo-liberal policies during the first year of United Progressive Alliance–II (UPA-II) has spawned crony capitalism, observes Communist Party of India (Marxist) general secretary Prakash Karat in his evaluation of the government’s performance which will appear in the coming issue of People’s Democracy.

http://www.thehindu.com/todays-paper/upaii-policies-have-spawned-crony-capitalism-karat/article770369.ece