காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் சீட்பெற பெண்கள் பாலியல் உறவுக்கு சாதகமாக நடந்துக் கொண்டனர் – மார்க்சீய அரசியல்வாதி சொன்னதால் கேரளாவில் பெண்கள் கொதித்துள்ளனராம் (1)!

காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் சீட்பெற பெண்கள் பாலியல் உறவுக்கு சாதகமாக நடந்துக் கொண்டனர் மார்க்சீய அரசியல்வாதி சொன்னதால் கேரளாவில் பெண்கள் கொதித்துள்ளனராம் (1)!

Cherian philip - facebook message

Cherian philip – facebook message

செரியன் பிலிப்பின் பேஸ் புக் கமென்ட்ஸ்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியின் முன்னாள் உதவியாளர் பிலிப் மற்றும் நெருக்கமானவர். 2001ல் இவருக்கு சீட் கொடுக்கப்படாதலால், காங்கிரஸை விட்டு விலகி இடதுசாரி கூட்டணியில் சேர்ந்தார். புத்துப்பள்ளி என்ற தொகுதியில் போட்டியிட, உம்மன் சாண்டி சந்தர்ப்பம் கொடுத்தார்[1]. சிபிஎம் கட்சிக்கு சொந்தமான கைரளி மற்றும் பீப்புள் செனல்களுக்கு ஆலோசகராகவும் உள்ளார்[2]. ஆரம்பகாலத்தில் காங்கிரஸில் இருந்தபோதும், அங்கு பல பொறுப்புகளில் இருந்டிருக்கிறார். கேரளாவில் கடந்த சிலநாட்களுக்கு முன்னர், திருச்சூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு சீட் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இளைஞர் கங்கிரசார் தங்களது சட்டையை கழட்டிவிட்டு தெருவில் அணிவகுப்பு நடத்தினர். இந்த போராட்டத்தை குறிப்பிட்டே பிலிப் இத்தகைய கருத்தை தெரிவித்து உள்ளார். “சட்டையை கழட்டிவிட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்துவது புதுவிதமானது. கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்காக அந்த பெண்கள் புதுவிதமாக ரகசிய போராட்டம் நடத்தினர்,” என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்து உள்ளார்[3].

Cherian philip - facebook message in Malayalam 1 and 2

Cherian philip – facebook message in Malayalam 1 and 2

மலையாளத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ள விதம்: உள்ளதை பேஸ்புக்கில் மலையாளத்தில் உள்ளதை ஆங்கிலத்தில் கீழ்கண்டவாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது:

In his anti-Congress blog, he expressed that women in the Congress party got tickets to fight elections in return for sexual favours[4].

“several women have disrobed themselves in secret and won seats in the Congress in the past.” [5]

Women stripped naked for seats in Congress[6].

Women in Congress Party Performed Sexual ‘Acts’ to Get Seats[7]

தமிழில் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டு, செய்திகளைப் போட்டுள்ளார்கள்:

 1. தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் சீட் பெறுவதற்காக பெண்கள் எதையும் செய்ய தயாராக இருந்ததாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளரும் ,அரசியல் விமர்சகருமான செரியன் பிலிப் கூறியுள்ளார்[8].
 1. தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றுக்கு பதிலளித்துள்ள செரியன் பிலிப்,கேரளாவில் பல பெண்கள் காங்கிரஸ் கட்சியில் சீட் வாங்குவதற்காக தங்களையே இழந்துள்ளதாக கூறியுள்ளார்[9].
 1. காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்காக பெண்கள் பாலியல் உறவுக்கும் சாதாமாக நடந்துக் கொண்டனர்[10].
 1. காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்காக சிலர் பெண்களை பயன்படுத்தினர்[11].

“உடையை அவிழ்த்துள்ளனர்” (disrobed / stripped naked) என்ற சொற்றொடர் தான் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளது. நல்லவேளை, நிர்வாணமாக என்று தமிழில் யாரும் மொழிபெயர்க்கவில்லை.

cherian-philip-seema

cherian-philip-seema

பெண்களிடம் இருந்து எதிர்ப்பு: செரியன் பிலிப்பின் கருத்துக்கு தேசிய அளவில் பல பெண்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் பெண்களுக்கு எதிரானவர், பெண்களை வெறுப்பவர் என்றெல்லாம் வர்ணித்தனர். இது ஒட்டுமொத்த பெண்களை இழிவுபடுத்தும் செயல் என மகிளா காங்கிரஸ் தலைவி பிந்து கிருஷ்ணா மற்றும் ஷநிமோல் உஸ்மான் ஆகியோர் கூறியுள்ளனர்[12]. செரியன் பிலிப்புக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாகவும் பிந்து கிருஷ்ணா தெரிவித்துள்ளார். பிலிப்பின் இத்தகைய கருத்துக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன[13]. கேரளா காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.எம். சுதீரன், பிலிப் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் கருத்தை திரும்பபெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்[14].

பிந்து கிருஷ்ணா மற்றும் ஷநிமோல் உஸ்மான்

பிந்து கிருஷ்ணா மற்றும் ஷநிமோல் உஸ்மான்

செரியன் பிலிப்பின் விளக்கம்: இது குறித்து கருத்து தெரிவித்துள்ள செரியன் பிலிப், “நான் பெண்களுக்கு எதிரான கருத்தையும் தெரிவிக்கவில்லை, பெண்களை அவமதிக்கவும் இல்லை. நான் எப்போதும் அவர்களுக்கு மதிப்பு அளிக்கிறேன். குறிப்பிட்ட ஆண்கள் அவர்களுடைய சுயநலத்திற்காக பெண்களை பயன்படுத்திக் கொண்டனர் என்றும் முழுபெண் சமூகத்தையும் அவமதித்தனர் என்பதையே குறிப்பிட்டு காட்டினேன்,” என்று மற்றொரு பதிவில் குறிப்பிட்டு உள்ளார். இப்பிரச்சினையின் சூடு அடங்குவதற்கு முன்னமே, தலைநகரில் திறமையில்லாத அரசினால் சட்டம் ஒழுங்குமுறை ஆபத்தில் உள்ளது. பட்டப்பகலிலேயே கற்பழிப்பு நடந்து கொண்டிருக்கிறது. எல்லா பெண்கள் இயக்கங்கள் மற்றும் மக்கள் இயக்கங்கள் அதனை எதிர்த்துப் போராட வேண்டிய தருணம் வந்து விட்டது. இதனால், டி. என். சீமா அவர்கள் அக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஒரு பட்டினி போராட்டத்தை ஆரம்பித்தால் முறையாக இருக்கும் என்று பேஸ் புக்கில் பதிவு செய்துள்ளார்[15]. டி. என். சீமா சிபிஎம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி ஆவார். இப்படி கற்பழிப்பு விவகாரத்தில், ஒரு மார்க்சீய பெண் அரசியல்வாதியை இழுத்திருப்பது, இவர் இன்னொரு பிரச்சினையை ஆரம்பித்துள்ளாரா என்று கேரளாவில் சிலர் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். ஏனெனில், 1990ல் இ.கே.நாயனார் அம்மாதிரி சொல்லித்தான் மாட்டிக் கொண்டார்.

© வேதபிரகாஷ்

20-10-2015


 

[1] http://www.newsx.com/national/12167-women-in-congress-got-party-tickets-in-return-for-sexual-favours-says-former-party-cherian-philip

[2] http://english.manoramaonline.com/news/kerala/cherian-philip-lands-in-soup-with-sexist-remark-congress.html

[3]  தினத்தந்தி, காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் சீட்பெற பெண்கள் பாலியல் உறவுக்கு சாதகமாக நடந்துக் கொண்டனர், முன்னாள் தலைவர், மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 19,2015, 10:22 AM IST; பதிவு செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 19,2015, 10:22 AM IST.

[4] http://www.newsx.com/national/12167-women-in-congress-got-party-tickets-in-return-for-sexual-favours-says-former-party-cherian-philip

[5] http://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/Women-have-disrobed-for-seats-Kerala-ex-Congress-chief/articleshow/49445981.cms

[6] http://www.india.com/news/india/women-stripped-naked-for-seats-in-congress-says-ex-party-chief-cherian-philip-642296/

[7] http://www.newindianexpress.com/states/kerala/Women-in-Congress-Party-Performed-Sexual-Acts-to-Get-Seats-CPI-Leader-Cherian-Philip/2015/10/19/article3086951.ece

[8] புதியதலைமுறை, காங்கிரஸ் கட்சியில் சீட் பெறுவதற்காக பாலியல் ரீதியாகவும் தயார் நிலையில் இருந்த கேரளப் பெண்கள் : முன்னாள் காங்கிரஸ் செயலாளர், பதிவு செய்த நாள் – அக்டோபர் 19, 2015, 11:14:41 AM; மாற்றம் செய்த நாள் – அக்டோபர் 19, 2015, 11:15:01 AM.

[9] http://www.puthiyathalaimurai.tv/women-have-disrobed-for-seats-kerala-ex-congress-chief-244013.html

[10] http://www.dailythanthi.com/News/India/2015/10/19102247/Women-in-Congress-did-sexual-favours-to-get-election.vpf

[11]  விகரடன், தேர்தல்சீட்டுக்காக பெண்களை பயன்படுத்தினர்: காங்கிரஸ் தலைவர் கருத்தால் சர்ச்சை!, Posted Date : 12:03 (19/10/2015).; Last updated : 12:03 (19/10/2015).

[12]  தமிழ்.ஒன்.இந்தியா, வாய் இருக்குதேன்னு உளறுன்னாஇப்படித்தான் செரியன் பிலிப் மாதிரி மாட்டிப்போம்!, Posted by: Sutha Updated: Monday, October 19, 2015, 13:03 [IST].
Read more at: http://tamil.oneindia.com/news/india/anti-women-comments-land-cherian-philip-controversy-238038.html

[13] http://www.vikatan.com/news/article.php?aid=53959

[14] http://tamil.oneindia.com/news/india/anti-women-comments-land-cherian-philip-controversy-238038.html

[15] “The rule of law is in danger in the national capital due to inefficiency of the government. Rape has become a common incident even in broad day light. It’s high time all women organisations and mass movements reacted to such incidents. It would be appropriate if T.N. Seema started a hunger strike in order to draw the attention of the public towards such heinous crimes,” Cherian’s FB post reads. http://english.manoramaonline.com/news/kerala/cherian-philip-targets-tn-seema-mp-on-facebook.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

3 பதில்கள் to “காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் சீட்பெற பெண்கள் பாலியல் உறவுக்கு சாதகமாக நடந்துக் கொண்டனர் – மார்க்சீய அரசியல்வாதி சொன்னதால் கேரளாவில் பெண்கள் கொதித்துள்ளனராம் (1)!”

 1. குஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா Says:

  […] [8] https://indiancommunism.wordpress.com/2015/10/20/women-stripped-naked-for-seat-in-congress/ […]

 2. குஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா Says:

  […] [8] https://indiancommunism.wordpress.com/2015/10/20/women-stripped-naked-for-seat-in-congress/ […]

 3. குஷ்பு-நக்மா-விஜயதாரிணி சண்டைக்குப் பிறகு, ஹஸினா-ஜான்சி-கௌரி சண்டை ராகுலிடம் சென்றுள்ளது – கா Says:

  […] [7] https://indiancommunism.wordpress.com/2015/10/20/women-stripped-naked-for-seat-in-congress/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: