Archive for the ‘காம்ரேட்’ Category

சீனா இந்தியாவை வேவு பார்க்கும் விதங்கள், உளவு நிறுவனங்கள், கருவிகள் மற்றும் சாதனங்கள் (1)

பிப்ரவரி 4, 2024

சீனா இந்தியாவை வேவு பார்க்கும் விதங்கள், உளவு நிறுவனங்கள், கருவிகள் மற்றும் சாதனங்கள் (1)

சீனா உளவு பார்ப்பதற்காக, புறா மற்றும் புறா போன்ற ட்ரோன்களை அனுப்பி, உளவு பார்த்து வருகின்றது:  ட்ரோன்களை வைத்து வேவு பார்ப்பது, சைனாவுக்குக் கைவந்த கலை. ஏற்கெனவே, இந்தியாவிற்கு அனுப்பப் படும் பொருட்களை ஏற்றிச் செல்லும் கோவேறு கழுதைகள் மூலம், சிப்களைப் பொறுத்தி வேவு பார்த்து வந்தது. தவிர, இந்தியாவில் கோடிக் கணக்கான மின்னணு பொருட்கள், சாதனங்கள் புழக்கத்தில் உள்ளன. இவற்றின் மூலம் உளவு பார்க்கவு சாத்தியம் உள்ளது.  சமீப காலத்தில், சீனா உளவு பார்ப்பதற்காக, புறா மற்றும் புறா போன்ற ட்ரோன்களை அனுப்பி, உளவு பார்த்து வருகின்றது. இது சுமார் 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது என்பது, அருணாசலப் பிரதேசத்தில் தெரிய வந்தது. ஏனெனில், அங்கு ஆடு-மாடு மேய்க்கும் இந்தியர், சில சமயங்களில் சீன கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளுக்குச் சென்றுவிடுவது வழக்கமாக இருக்கிறது.க உண்மையில் பரம்பரையாக பல குடும்பத்தினர் ஈடுபட்டு வருவதால், அவர்கள் சீனர்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. அவர்கள் அத்தகைய புறாக்களைக் கண்டிருக்கின்றனர்-பிடித்திருக்கின்றனர்.

மஹாராஷ்ட்ராவில் புறா பிடிபட்டது: இத்தகைய புறா மஹாராஷ்ட்ராவில் தென்பட்டது. ஆகவே தான், சீனா இந்தியாவை உளவு பார்க்க பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் அப்புறா பிடிபட்டது[1]. கால்நடை மருத்துவமனையில் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக அந்தப் புறா எட்டு மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளது என புதன்கிழமை 31-01-2024 அன்று மும்பை காவல்துறை கூறியுள்ளது[2]. மும்பையில் உள்ள பரேல் பகுதியில் உள்ள விலங்குகளுக்கான பாய் சகர்பாய் மருத்துவமனை 29-01-2024, திங்கள்கிழமை அன்று பறவையை விடுவிக்க காவல்துறையின் அனுமதியைக் கோரியது[3]. அதைத் தொடர்ந்து 30-01-2024 செவ்வாய்கிழமை அன்று புறா விடுவிக்கப்பட்டது என்று மும்பையின் ஆர்சிஎஃப் காவல் நிலைய அதிகாரி தெரிவிக்கிறார்[4]

மும்பை புறப்பகுதியில் சிக்கிய புறா: புறநகர் பகுதியான செம்பூரில் உள்ள பிர் பாவ் ஜெட்டியில் கடந்த ஆண்டு 2023, மே மாதம் இந்தப் புறா பிடிபட்டது[5]. புறாவிற்கு இரண்டு மோதிரங்கள் அணிவிக்கப்பட்டிருந்தன[6]. அவற்றில் ஒன்று தாமிரம் மற்றும் மற்றொன்று அலுமினியத்தால் ஆனவை[7]. புறாவின் இரண்டு இறக்கைகளின் கீழ் பக்கத்திலும் சீன எழுத்துக்களில் எழுதப்பட்ட செய்திகள் இருந்தன[8]. இது தொடர்பாக ஆர்சிஎஃப் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்குப் பின் உளவுக் குற்றச்சாட்டு கைவிடப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, பிடிபட்ட புறா தைவானில் பந்தயத்தில் ஈடுபடுத்தப்படும் புறா என்று போலீசார் கண்டுபிடித்தனர். ஒரு பந்தயத்தின்போது அந்தப் புறா பறந்து இந்தியாவிற்கு வந்திருக்கிறது என்றும் போலீசார் கூறுகின்றனர். மருத்துவமனையின் கோரிக்கையை ஏற்று, புறாவை விடுவிக்க ஆட்சேபனை இல்லை என்று போலீசார் கூறியதை அடுத்து, புறா விடுவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்டபோது பறவையின் உடல்நிலை நன்றாக இருந்தது என்றும் மும்பை போலீசார் கூறுகின்றனர்.

ஏப்ரல் 2023ல் சிக்கிய புறா: நடுக்கடலில் மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர் படகில் இலங்கை புறா தஞ்சமடைந்தது. அதன் காலில் கட்டப்பட்ட வளையத்தில், சீன எழுத்துக்கள் இருந்ததால், இந்தியா அல்லது இலங்கையை சீனா உளவு பார்க்க அனுப்பியதா என்று பரபரப்பு ஏற்பட்டிருந்தது[9]. கடந்த 15ம் திகதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அரசபாண்டி என்பவரது நாட்டுப்படகில், பாம்பனில் இருந்து 13 கிலோமீற்றரில பாக் ஜலசந்தி கடலில் மீனவர்கள் மீன் பிடித்தனர். அப்போது வானில் வட்டமடித்த புறா ஒன்று, திடீரென படகில் தஞ்சமடைந்தது. குறித்த புறாவின் காலில் உள்ள வளையத்தில், “இலங்கை யாழ்ப்பாணம் சுதன்” என்றும் தொலைபேசி எண் ஒன்றும் எழுதப்பட்டிருந்தது[10]. மற்றொரு காலில் சீன எழுத்துக்கள் பொறித்த ஸ்டிக்கர், அதன் கீழே எம்.எப்., 3209 என எழுதப்பட்டிருந்தது[11]. இதன் காரணமாக குறித்த புறா சீனாவால் இந்தியா அல்லது இலங்கையை உளவு பார்ப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்டாத என சந்தேகங்கள் வெளியிடப்பட்டன[12]. இதனையடுத்து ஐபிசி தமிழ் குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு கேட்ட போது 

கேள்வி உங்களுடைய பெயர் பொறிக்கப்பட்ட தகட்டுடன் ஒரு புறா இந்திய கடலில் சிக்கியிருக்கிறது, அதற்கும் உங்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா ?

பதில் ஆம், அந்த புறாவின் உரிமையாளர் நான் தான், குறித்த புறா பந்தய ஓட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகின்ற புறா.

கேள்வி குறித்த புறாவின் காலில் சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தகடு ஒன்று காணப்படுகிறது, அதை பற்றி உங்களுடைய கருத்து ?

பதில் ஓட்டப்பந்தயங்களில் இரகசிய இலக்கமிடுவதற்கே குறித்த தகடு (புறாவின் காலில் பூட்டபட்டு இருந்த வளையம்) பயன்படுத்தப்படுகிறது. அது சீனாவில் உற்பத்தி செய்யப்படுகின்றமையால் தான் குறித்த தகட்டில் சீன எழுத்துக்கள் காணப்படுகிறது, மேலும் அந்த தகடு சகல புறா பந்தய வள ச்ர்ப்பாளர்களிடமும் உள்ளது. எனவும் தெரிவித்தார். ஆக, குறித்த புறா உளவு பார்ப்பதற்காக அனுப்பட்டதா என்பது தொடர்பில் எழுந்த சர்ச்சைகள் உண்மைக்கு புறம்பானவை என்றும் குறித்த புறா பந்தய ஓட்டத்தின் போது வழிமாறி சென்று இருக்கலாம் என்றுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2023 ஒரிஸாவில் புறா:  உளவு சாதனங்கள் மற்றும் கேமராவுடன் வந்த புறா ஒன்று ஒடிசா மாநில மீனவர்களிடம் சிக்கியது[13]. இந்தப் புறா உளவு பார்க்க அனுப்பப்பட்டதா என போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்[14]. ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகம் அருகே 40 கடல் மைல் தொலைவில் அண்மையில் மாநில மீனவர்கள் தங்களது சாரதி என்ற படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தங்களது படகில் ஒரு வெள்ளை நிறப் புறா வந்து அமர்ந்ததை மீனவர்கள் பார்த்தனர். படகை இயக்கிய சங்கர் பெஹரா என்ற மீனவர், அந்த வெள்ளை புறாவைப் பிடித்து பரிசோதித்தார். அப்போது அதன் காலில் கேமரா, மைக்ரோசிப் போன்ற உளவு சாதனங்கள் பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. கேமரா தெரியாதவகையில் அதன் மீது கருப்பு டேப் போட்டு ஒட்டப்பட்டு இருந்தது. மேலும் புறாவின் இறக்கைகளில் வெளிநாட்டு மொழிகளில் ஏதோ எழுதியிருந்தது. இதையடுத்து அந்தப் புறாவை போலீஸாரிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர். இதுகுறித்து சங்கர் பெஹரா கூறும்போது, “இந்த புறா சீனாவிலிருந்து உளவு பார்க்க வந்ததாக நாங்கள் சந்தேகிக்கிறோம். ஒடிசா கடற்கரையில் உளவு பார்க்க இது அனுப்பப்பட்டு இருக்கலாம்” என்றார். இதுகுறித்து ஜெகத்சிங்பூர் போலீஸ் எஸ்.பி. ராகுல் கூறும்போது, “இந்தப் புறாவையும், உளவு சாதனங்களையும் மாநில தடயவியல் அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளோம். அதன் இறக்கைகள் மீது என்ன எழுதப்பட்டுள்ளது என்பதையும் கண்டுபிடிக்க மொழி அறிஞர்களின் உதவியை நாடியுள்ளோம். இதுவரை இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை” என்றார். இந்தப் புறா உளவு பார்க்க அனுப்பப்பட்டு இருக்கலாம் என மாநில போலீஸார் சந்தேகப்பட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பாரதீப் பகுதியைச் சுற்றி அமைந்துள்ள பலசோர் தீவில் ஏவுகணை சோதனை மையம், ஒடிசா கடலோரப் பகுதியில் ஐஓசிஎல் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

© வேதபிரகாஷ்

03-02-2024


[1] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், சீனாவுக்கு உளவு பார்ப்பதாகப் பிடிபட்ட புறா 8 மாதங்களுக்குப் பின் விடுதலை!, SG Balan, First Published Jan 31, 2024, 5:41 PM IST; Last Updated Jan 31, 2024, 5:41 PM IST

[2] https://tamil.asianetnews.com/india/pigeon-suspected-of-spying-for-chinese-released-after-8-months-mumbai-police-sgb-s84kij

[3] நக்கீரன், உளவு பார்ப்பதாக கைதான புறா; 8 மாதங்களுக்குப் பின் விடுவிப்பு!, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 01/02/2024 | Edited on 01/02/2024

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/india/pigeon-arrested-spying-and-released-after-8-months

[5] தினமலர், சந்தேகத்திற்குரிய சீன உளவுப்புறா விடுவிப்பு, பதிவு செய்த நாள்: பிப் 01,2024 00:53.

[6] https://m.dinamalar.com/detail.php?id=3539636

[7] தினகரன், சீனாவுக்கு உளவு பார்ப்பதாக சந்தேகம் 8 மாதமாக காவலில் இருந்த புறா விடுவிப்பு, February 1, 2024, 1:49 am.

[8] https://www.dinakaran.com/suspectedspying_chinapigeon_whodetained_8monthsreleased/ – google_vignette

[9]  ஐ.பி.சி.தமிழ்.காம், இந்தியாஇலங்கையை உளவு பார்க்க சீன புறா..!, By Kiruththikan, ஏப்ரல் 2023

[10] https://ibctamil.com/article/chinese-pigeon-to-spy-on-india-1681973050

[11] மாலைமலர், மீனவரின் படகில் தஞ்சமடைந்த புறா உளவு பார்க்க அனுப்பப்பட்டதா?- உளவுத்துறை விசாரணை, By Suresh K Jangir, 20 ஏப்ரல் 2023 4:34 PM.

[12] https://www.maalaimalar.com/news/district/tamil-news-intelligence-investigation-was-the-pigeon-sent-to-spy-on-the-fisherman-boat-599175

[13] தமிழ்.இந்து, உளவு சாதனம், கேமராவுடன் வந்த புறாவை பிடித்த ஒடிசா மீனவர்கள்உளவு பார்க்க அனுப்பப்பட்டதா என போலீஸார் விசாரணை, செய்திப்பிரிவு, Published : 15  Mar 2023 05:33 AM; Last Updated : 15 Mar 2023 05:33 AM.

[14] https://www.hindutamil.in/news/india/960609-odisha-fishermen-who-caught-a-pigeon-with-a-surveillance-device-a-camera-police-probe-whether-it-was-sent-for-spying.html

கம்யூனிஸம், தொழிற்சாலைகள், பொருள் உற்பத்தி,  வியாபாரம், விநியோகம், லாபம்: பிறகு போர், ஆயுத சப்ளை முதலிய ஏன்? (2)

மே 29, 2023

கம்யூனிஸம், தொழிற்சாலைகள், பொருள் உற்பத்தி,  வியாபாரம், விநியோகம், லாபம்: பிறகு போர், ஆயுத சப்ளை முதலிய ஏன்? (2)

கம்யூனிசம், உற்பத்தி, வியாபாரம், கமிஷன் இத்யாதிகள்: மேற்கு வங்காளத்தில் முதலீடு செய்யுமாறு கம்யூனிஸ்டுகள் கோரும் பொழுது, முதலாளிகள் யோசிப்பார்கள். நானோ கார் விசயத்தில் மம்தாவே ஒரு மாதிரி நடந்து கொண்டபோது, டாடா அந்த தொழிற்சாலையை குஜராத்திற்கு எடுத்துச் சென்று விட்டார். இப்பொழுதும், கேரளாவில் முதலீடு செய்ய முதலாளிகள் யோசித்து தான் வருகிறார்கள். தமிழகத்தைப் பொறுத்த வரையிலும் கமிஷன், ஊழல் பெரியப் பிரச்சினையாக இருக்கிறது. மற்ற உதிரி கட்சிகள், தொழிலாளர் போர்வையில், கட்டப் பஞ்சாயத்து, மிரட்டி காசு வாங்குவது போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள். லோடிங்-அன் – லோடிங் முதல், எங்கள் ஊர் வழியாக்கத்தான், உங்கள் வண்டிகள் செல்ல வேண்டும் போன்ற மிரட்டல்கள் வரை அக்கடிகள் செய்வது, பணம் வாங்கிக் கொள்வது மாமூலாக உள்ளது. இவர்கள் எல்லோருமே கம்யூனிஸம் தான் பேசுவார்கள். போஸ்டர்களில் எல்லோருடைய படங்களையும் போட்டுக் கொள்வார்கள். ஆனால், அவையெல்லாமே போலித்தனம் தான். காசு கொடுக்கவில்லை என்றால் எந்த வேலையும் நடக்காது.

ரஷ்யாவும் ரூபாய்ரூபிளில் வர்த்தகம் மேற்கொள்ள முடிவு செய்தது: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இந்த தடை காரணமாக டாலரில் வர்த்தகம் மேற்கொள்வது பாதிக்கப்பட்டது. பொருளாதார தடையை அடுத்து குறைந்த விலையில் தனது கச்சா எண்ணெயை விற்க ரஷ்யா முன்வந்ததால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணையை அதிக அளவில் வாங்கத் தொடங்கின. இந்தியாவிடம் இருந்து ரூபாயைப் பெற்றுக்கொண்டு கச்சா எண்ணையை ரஷ்யா ஏற்றமதி செய்து வந்தது. கடந்த 2022-23 நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் ரஷ்யாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 2.8 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் ஏற்றுமதியில் இது 11.6 சதவீதமாக இருந்தது. அதேநேரத்தில், இதே காலகட்டத்தில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மேற்கொண்ட இறக்குமதி 41.56 பில்லியன் டாலராக உயர்ந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் நாளொன்றுக்கு 16.80 லட்சம் பேரல் கச்சா எண்ணையை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 6 மடங்கு அதிகம். தொடக்கத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் ரூபாய் – ரூபிளில் வர்த்தகம் மேற்கொள்ள முடிவு செய்தன. எனினும், போர் காரணமாக சந்தையில் ரூபிளுக்கு ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக அந்த முடிவு கைவிடப்பட்டது.

அமெரிக்காவின் பொருளாதார தடை விலக்கப்பட்டால், ரூபாயை டாலரில் மாற்றிக்கொள்ள முடியும்: ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு அமெரிக்கா இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தது. எனினும், அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்து வந்தது. இந்திய ரூபாய் மூலம் ரஷ்யா வர்த்தகத்தை தொடர்ந்த நிலையில், ரஷ்யாவுக்கு சொந்தமான பல நூறு கோடி ரூபாய்கள் தற்போது இந்திய வங்கிகளில் உள்ளன. ரஷ்யாவுக்கான இந்தியாவின் இறக்குமதி அதன் ஏற்றுமதியைவிட 5 மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ரூபாய்களை போதுமான அளவு பயன்படுத்த முடியாத நிலை ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு சமீபத்தில் கோவாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவ், “எங்களுக்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய்கள் இந்திய வங்கிகளில் உள்ளன. அவற்றைப் பயன்படுத்த வேண்டுமானால், அவற்றை வேறு நாணயத்துக்கு மாற்ற வேண்டிய தேவை உள்ளது. அதுதான் தற்போதைய பிரச்சினை. அதுகுறித்தே விவாதித்து வருகிறோம்,” என தெரிவித்தார்[1]. அமெரிக்காவின் பொருளாதார தடை விலக்கப்பட்டால், ரூபாயை டாலரில் மாற்றிக்கொள்ளவும், அதன் மூலம் சர்வதேச வர்த்தகத்திற்கு அவற்றைப் பயன்படுத்தவும் முடியும். அதுவரை என்ன செய்வது என்பதே ரஷ்யாவின் முன் உள்ள மிகப் பெரிய கேள்வியாக உள்ளது[2].

கம்யூனிசத்தின் மறுபக்கம்: “கம்யூனிஸத்தின் கொடிய முகம்: குற்றங்கள், பயங்கரவாதம், தீவிரவாதம், அடக்குமுறை” [The Black Book of Communism: Crimes, Terror, Repression] என்பது 1997 ஆம் ஆண்டு ஸ்டீபன் கோர்டோயிஸ், ஆண்ட்ரெஜ் பாஸ்கோவ்ஸ்கி, நிக்கோலஸ் வெர்த், ஜீன்-லூயிஸ் மார்கோலின் மற்றும் பல ஐரோப்பிய கல்வியாளர்களால் கம்யூனிச அரசுகளின் அரசியல் அடக்குமுறையின் வரலாற்றை ஆவணப்படுத்தும் புத்தகமாகும். நாடு கடத்தல், மற்றும் தொழிலாளர் முகாம்களில் மரணங்கள் மற்றும் செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சங்கள் முதலியவை விளக்கப் பட்டுளளன.. இந்த புத்தகம் முதலில் பிரான்சில் Le Livre noir du communisme: Crimes, terreur, repression என எடிஷன்ஸ் ராபர்ட் லாஃபோன்ட்டால் வெளியிடப்பட்டது. யுனைடெட் ஸ்டேட்ஸில், இது ஹார்வர்ட் யுனிவர்சிட்டி பிரஸ்ஸால் வெளியிடப்பட்டது, மார்ட்டின் மாலியாவின் முன்னுரையுடன். பைபர் வெர்லாக் வெளியிட்ட ஜெர்மன் பதிப்பில் ஜோச்சிம் காக் எழுதிய அத்தியாயம் உள்ளது. அறிமுகத்தை கோர்டோயிஸ் எழுதியுள்ளார். வரலாற்றாசிரியர் பிரான்சுவா ஃபியூரெட் முதலில் அறிமுகத்தை எழுத திட்டமிடப்பட்டார், ஆனால் அவர் அதைச் செய்வதற்கு முன்பே இறந்துவிட்டார்.

நாசிஸம், பாசிஸம் போன்றது தான் கம்யூனிஸமும்: பிடிவாத சித்தாந்தம், உறுதியான கருத்தியல், கடுமையான சிந்தனை முடிவுகள், முதலியவை எதேச்சதிகாரம், சர்வாதிகாரம், சகிப்புத் தன்மையற்ற தலைமை, தனக்கு நிகராக இன்னொருவன் வரக்கூடாது போன்ற குணாதசியங்களை சுலபமாக பார்க்கலாம். சோசியலிஸம், சமதர்மம், சம-உரிமை, என்றெல்லாம் பேசினாலும், கூட்டங்கள், தங்குமிடங்கள், உணவு, வாகனம் போன்றவற்றில் எல்லாவிதமான பாரபட்சங்களையும் பார்க்கலாம். இரண்டாவது, மூன்றாவது நிலை பொறுப்பாளர்களிடம் கூட அத்தகைய குணாதிசயங்களை காணலாம். நாசிஸம், பாசிஸம் போன்றது தான் கம்யூனிஸமும் என்பதை உணர்ந்து கொள்லலாம். ஆனால் இவர்கள், மற்ரவர்களை நாசிஸ்ட், பாசீஸ்ட் என்றெல்லாம் சொல்லித் திடிக் கொண்டிருப்பர்.  அதனல், மற்றவர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படையாக சொல்லவோ, விவத்க்கவ்ப்ப் முடியாது.

கம்யூனிசத்தின் பிளாக் புக் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, மில்லியன் கணக்கான பிரதிகள் விற்கப்பட்டுள்ளன, மேலும் 20 ஆம் நூற்றாண்டில் கம்யூனிசத்தின் வரலாறு, குறிப்பாக சோவியத் யூனியன் மற்றும் பிற மாநில வரலாறு பற்றி எழுதப்பட்ட மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் சர்ச்சைக்குரிய புத்தகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சோசலிச ஆட்சிகள், இந்தப் பணியானது பரந்த அளவிலான பிரபலமான-பத்திரிகை வெளியீடுகள் மற்றும் வரலாற்றாசிரியர்களால் பாராட்டப்பட்டது, அதே சமயம் கல்விசார் பத்திரிகைகள் மற்றும் நிபுணர்களின் மதிப்புரைகள் சில வரலாற்றுத் தவறுகளுக்கு மிகவும் விமர்சனமாகவோ அல்லது கலவையாகவோ இருந்தன, மேலும் வெர்த்தின் அத்தியாயம் நேர்மறையாக இருந்தது; கம்யூனிசத்தை நாசிசத்துடன் ஒப்பிடுவதற்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கும், எண்களைக் கையாளுதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கைக்கு வருவதற்கும் முக்கிய பங்களிப்பாளர்கள் மூவர் உட்பட கோர்டோயிஸின் அறிமுகம் குறிப்பாக விமர்சிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது யூத எதிர்ப்புக் குழுவிற்காக இலியா எஹ்ரென்பர்க் மற்றும் வாசிலி கிராஸ்மேன் ஆகியோரால் எழுதப்பட்ட கிழக்கு முன்னணியில் நாஜி அட்டூழியங்களின் ஆவணப் பதிவான தி பிளாக் புக் ஆஃப் சோவியத் யூவரியை எதிரொலிக்கும் வகையில் புத்தகத்தின் தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது.

© வேதபிரகாஷ்

29-05-2023


[1] தமிழ்.இந்து, கோடிக்கணக்கான இந்திய ரூபாய்களை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோம்: ரஷ்யா, செய்திப்பிரிவு, Last Updated : 08 May, 2023 06:18 PM

[2] https://www.hindutamil.in/news/world/987219-russia-says-it-has-billions-of-indian-rupees-that-it-can-t-use.html

கம்யூனிஸம், தொழிற்சாலைகள், பொருள் உற்பத்தி,  வியாபாரம், விநியோகம், லாபம்: பிறகு போர், ஆயுத சப்ளை முதலிய ஏன்? (1)

மே 29, 2023

கம்யூனிஸம், தொழிற்சாலைகள், பொருள் உற்பத்தி,  வியாபாரம், விநியோகம், லாபம்: பிறகு போர், ஆயுத சப்ளை முதலிய ஏன்? (1)

உக்ரைன் போரும், நாடோவும்: ‘நேட்டோ’ (NATO[1]) எனப்படும், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் விரும்பியது. அதனை ரஷ்யா விரும்பவில்லை. பரவலாக நேட்டோ (NATO) என அறியப்படும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization) என்பது, 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள் வட அத்திலாந்திய ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் உருவான ஒரு இராணுவக் கூட்டணி ஆகும். இதன் தலைமையகம் பெல்ஜியத்தின் தலைநகரமான பிரசல்ஸில் உள்ளது. வெளியார் தாக்குதலுக்கு எதிராக பரஸ்பர பாதுகாப்பு உதவி வழங்குவதற்கு இதிலுள்ள உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் இணங்கியதன் மூலம் இவ்வமைப்பு ஒரு கூட்டுப் பாதுகாப்பு முறையைக் கொண்டுள்ளது. இதன் முதல் சில ஆண்டுகள் இது ஒரு அரசியல் கூட்டணியாகவே செயல்பட்டது. ஆனாலும், கொரியப் போர் இதன் உறுப்பு நாடுகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு ஐக்கிய அமெரிக்கத் தளபதிகளின் கீழ் ஒன்றிணைந்த படைக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது.

NATO vs Warsaw Pact countries – ரஷ்ய ஆதரவுஎதிர்ப்பு என்ற நிலையில் செயல்படுவது: இக் கூட்டணியின் முதல் செயலாளர் நாயகமான லார்ட் இஸ்மே என்பவரின் புகழ் பெற்ற கூற்றின்படி, இவ்வமைப்பின் நோக்கம், ரஷ்யர்களை வெளியிலும், அமெரிக்கர்களை உள்ளேயும், ஜேர்மானியர்களைக் கீழேயும் வைத்திருப்பதாகும். இவ்வாறான ரஷ்ய-ஜெர்மனி எதிர்ப்புகளுடன் செயல்படும் நாடோவின் போக்கு கேள்விக்குரியதாகும். ஜெர்மனி இத்தகைய விசயங்களைப் பற்றி கண்டுகொள்வதில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். பனிப்போர்க் காலம் முழுவதும், ஐக்கிய அமெரிக்காவினதும், ஐரோப்பிய நாடுகளினதும் தொடர்புகளின் பலம் குறித்த ஐயம் நிலவி வந்ததுடன், சோவியத் ஒன்றியத்தின் தாக்குதலுக்கு எதிராக “நாட்டோ” கூட்டணியினர் வழங்கக்கூடிய பாதுகாப்புக் குறித்த கவலைகளும் இருந்தன. இது பிரான்சின் அணுவாயுதத் திட்டத்தின் உருவாக்கத்துக்கும், 1966 இல் பிரான்ஸ் நாட்டோவின் இராணுவக் கட்டமைப்பிலிருந்து விலகுவதற்கும் வழிகோலியது.

பிப்ரவரி 2023லிருந்து தொடரும் உக்ரைன்ரஷ்யா போர்: ஆனால், உக்ரைன் அதற்கு இணங்காமல் தொடர்ந்து நாடோவுடன் உறவுகளை பலபடுத்தி வந்தது.  உண்மையில் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை எதிர்த்தாலும் ரஷ்யாவிலிருந்து பல பொருட்களைப் பெற்று வாழவேண்டியிருக்கிறது. குறிப்பாக, ரஷ்யாவின் எரிவாயு மற்றும் எண்ணை ஐரோப்பிய நாடுகளுக்கு சப்ளை நடந்து வருகின்றது. இந்த சண்டையினால், எரிபொருட்கள் சப்ளை குறைந்து, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப் படும் நிலை உருவாகியுள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரி 24ம் தேதி 2023 முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக, அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன. அதோடு, உக்ரைனுக்கு ராணுவ ஆயுதங்களையும் வழங்கி உதவி செய்து வருகின்றன. உக்ரைனில் போர் துவங்கிய நாள் முதல் இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளதாக ஐ.நா., வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டில் மட்டும் 60 லட்சம் பேர் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா, ரஷ்யாவுடன் நேரிடையாக ரூபாய்ரூபிள் பரிவர்த்தனையில் ஈடுபட முடிவு  செய்தது: ஒரு நாடு எந்த பொருள் வாங்கினாலும் முதலில் தனது பணத்தை அமெரிக்க டாலராக மாற்றும். அதன் பின் மற்றோரு டாலரை வைத்து வணிகம் செய்யும். எந்த சிரமமும் இல்லாமல் பயணிக்கும் இந்த இடைத்தரகர் “டாலர்” மூலம் அமெரிக்கா கொள்ளை லாபம் பார்ப்பதாக அடிக்கடி புகார் எழுந்து அது அடங்கிப் போய்விடும். எந்த நாடாவது டாலர் வணிகத்தை விட்டு வெளியேறினால் அந்த நாட்டில் அமெரிக்கா தன்னாலான அனைத்தையும் செய்து அந்த எண்ணத்தை வேரோடு நீக்கிவிடும். அந்நிலையில் இந்தியா, ரஷ்யாவுடன் நேரிடையாக ரூபாய்-ரூபிள் பரிவர்த்தனையில் ஈடுபட முடிவு செய்துள்ளது. இதனால், டாலரின் தாக்கம் இல்லாமல் போய் விடும். இதனை அமெரிக்கா விரும்பவில்லை. மேலும், இந்தியா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணையை வாங்கி, சுத்தகரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது[2]. அதாவது, ரஷ்ய எரிபொருளை மறைமுகமாக இந்தியாவிலிருந்து வாங்குகிறது. இதனால், பொருளாதார ரீதியில், இந்தியாவுக்கு லாபம் தான்[3].

மிகப்பெரிய போருக்கு உக்ரைன் தயார்!: ரஷ்யாவுக்கு எதிராக மிகப்பெரிய போருக்கு உக்ரைன் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் மைக்கெலோ பொடொல்யாக் தேசிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலூம், இரு பிரிவினைவாத பகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு டோன்பாஸ் பிரதேசத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரஷ்யப் படைகளை உக்ரைன் முறியடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அப்பிரிவினைவாதிகள் யாரால் ஊக்குவிக்கப் படுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. எல்லைப் பகுதிகளில் இவ்வாறான பிரிவினைவாதிகளை வளர்த்து, அவர்களுக்கு பணம், ஆயுத சப்ளை முதலியவற்றைக் கொடுப்பது முதலியனவும் கவனிக்கலாம். தொடர்ந்து உக்ரைனில் உள்ள கட்டிடங்கள், வாழ்விடங்கள், கட்டுமானகள் முதலியன பில்லியன் கணக்கில் நாசமாகிக் கொண்டிருக்கும் பொழுது, சண்டையை நிறுத்தாமல், தொடர்ந்து போராட ஆயுதங்கள் கேட்பதும், அவற்றை அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் கொடுப்பதும் திகைப்பாக இருக்கிறது. போர் தொடர்வதால், நிச்சயமாக அழிவுகள் அதிகமாகும், மேன் மேலும் அப்பாவி மக்கள் கொல்லப் படுவர். இறகு போர் தொடர வேண்டிய அவசியம் என்ன?

கொரோனா மற்றும் உக்ரை யுத்தம் இவற்றால் யார் லாபம் அடைகின்றனர் என்றால், நிச்சயமாக எரிபொருள் உற்பத்தியாளர் மற்றும் அதனுடன் சம்பந்தப் பட்ட தொழிற்சாலைகள் – வியாபாரங்கள் தாம். உலக நாடுகள் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளில் இருக்கும் போது சற்றும் எதிர்பார்க்காத விதமாக விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்ய அரசு உக்ரைன் மீது போர் தொடுத்து பெரும் பொருளாதார, வர்த்தகப் பின்னடைவுக்கு வழிவகுத்தது. ஆனால், அதற்கு காரணம் நாடோ அமைப்பு தான். இந்தப் போர் காரணமாக முதலில் அதிகம் பாதிக்கப்பட்டது கச்சா எண்ணெய் தான்.ரஷ்யா மீது பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் உட்படப் பல நாடுகள் தடை விதித்த நிலையில், ரஷ்யா அதிகப்படியான தள்ளுபடியில் கச்சா எண்ணெய்-ஐ விற்பனை செய்யத் துவங்கியது. இதேவேளையில் பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் டீசல் மற்றும் பிற எரிபொருளுக்கான தேவை அதிகமாக இருந்தது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நேடோ அமைப்பில் இடம்பெற்றுள்ள போலந்து மற்றும் பல்கேரியா நாடு கேஸ் விநியோகத்தை ரஷ்யா நிறுத்தியுள்ளது.

கம்யூனிஸ முதலாளிகள்: இதில் என்ன வேடிக்கை என்றால், கம்யூனிஸம், பொதுவுடமை என்றெல்லாம் பேசுகின்றவர்கள் தான், தொழிற்சாலைகளை வைத்துக் கொண்டு பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். லாபம் பெறுகின்றன. ஷேர்களை விற்று கொள்ளை லாபம் அடைவதோடு, உலக பொருளாதாரத்தையும் ஆட்டி வைக்கின்றனர். இன்றைக்கு, அமெரிக்கக் கம்பெனிகள் இந்தியாவை ஆட்டிப் படைக்கின்றன. பொருளாதாரத்தையும் கட்டிப் போட முயன்று வருகின்றன. சீனாவைப் பற்றி ஒன்று ரகசியம் இல்லை, மாவோயிஸம் பேசி, அண்டை / எல்லை நாடுகளில் மாவோயிஸ தீவிரவாடிகளை வளர்த்து, அதிகமாக பொருட்களை உற்பத்தி செய்து, மற்ற நாடுகளில் புகுத்துவது தான் காலம்-காலமாக வியாபாரமாக இருந்து வருகிறது. இங்கு வேலை செய்யும் கோடானுக்கோடி சீன-வேலைக்காரர்கள், அவர்களது நிலை, உரிமை முதலியவற்றைப் பற்றி யாரும் பேச, விவாதிக்க, எழுத மாட்டார்கள். EPW போன்றவையும் மூச்சு விடாது.

© வேதபிரகாஷ்

29-05-2023


[1] The North Atlantic Treaty Organization (NATO), also called the North Atlantic Alliance, is an intergovernmental military alliance between 31 member states – 29 European and two North American. Established in the aftermath of World War II, the organization implemented the North Atlantic Treaty, signed in Washington, D.C., on 4 April 1949. NATO is a collective security system: its independent member states agree to defend each other against attacks by third parties. During the Cold War, NATO operated as a check on the threat posed by the Soviet Union. The alliance remained in place after the dissolution of the Soviet Union and the Warsaw Pact, and has been involved in military operations in the Balkans, the Middle East, South Asia, and Africa. The organization’s motto is animus in consulendo liber[5] (Latin for “a mind unfettered in deliberation”).

[2] Hindustan Times, India can buy as much Russian oil as it wants, outside price cap, says US, Reuters | Nov 12, 2022 09:48 AM IST.

[3] https://www.hindustantimes.com/india-news/india-can-buy-as-much-russian-oil-as-it-wants-outside-price-cap-says-us-101668202815336.html

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் – லாபம் என்ன – பங்குகள், பங்குதாரர்கள் என திடீரென்று பிரச்சினை வந்துள்ளது ஏன்? போலீஸ் புகார், வழக்கு என்றாகி சமரசம் எப்படி உண்டானது?(4)

மே 28, 2023

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்லாபம் என்னபங்குகள், பங்குதாரர்கள் என திடீரென்று பிரச்சினை வந்துள்ளது ஏன்? போலீஸ் புகார், வழக்கு என்றாகி சமரசம் எப்படி உண்டானது?(4)

போலீஸ் புகாரிலிருந்து நீதிமன்றத்திற்கும் சென்றாகி விட்டதாம்: உள்ளரங்கில் பேசிக் கொண்டிருக்கும்போதே, காவல்துறையில் புகார், நீதிமன்றத்தில் வழக்கு, தடை உத்தரவு என பிரச்சனையை அவர்களே பொதுவெளிக்கு கொண்டு சென்றார்கள். இதன் தொடர்ச்சியாக எஸ்.வி.ராஜதுரை கட்டுரை எழுதினார். அதில், மதிப்புமிக்க தலைவர் டி.ராஜா அவர்கள், அலுவலகத்துக்குச் சென்று மிரட்டியதாக மதியிழந்து குற்றம் சாட்டினார். பங்குகளை மாற்றுவதில் செய்யப்பட்டிருந்த முறைகேடுகளை நிரூபிக்க தெளிவான ஆவணங்கள் நம்மிடம் இருந்தன. அவற்றை வைத்து நாமும் காவல்துறையில் புகார் தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தனக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவ்வாறு ஏற்படுத்தியவரை பற்றி காவல் நிலையத்தில் புகார் செய்வது தானே சட்டம் விதித்துள்ள நடைமுறை. ஆவணங்களை பரிசீலித்த காவல்துறை, முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்து அதற்குரிய பிரிவுகளில் வழக்கு போட்டது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய தேடியது. ஆனாலும் கூட, அந்த நிலையிலும் பேசி சுமூக உடன்பாடு காண வேண்டும் என்றே கட்சி விரும்பியது.அதற்கான செயல்பாட்டிலும் ஈடுபட்டது. இந்த நிலையில் சண்முகம் சரவணன் நேரில் வந்து பேசுவதாக உறுதி அளித்தார். 24.5.2023 அன்று அவரும் அவருடன் மண்டல மேலாளர்களான மதுரை கிருஷ்ணமூர்த்தி, திருச்சி குமார், கோவை ரங்கராஜன், மற்றும் பாவை அச்சகத்தின் மேலாளர் சிவகுமார் ஆகியோர் பாலன் இல்லம் வந்தார்கள். அவர்களோடு பேச கட்சியின் செயற்குழு, தோழர்கள் இரா.முத்தரசன், கே.சுப்பராயன், டி.எம்.மூர்த்தி ஆகியோரை நியமித்தது. மேலே சொல்லப்பட்டவை உட்பட பல்வேறு விஷயங்களை ஆவணச் சான்றுகளோடு தோழர்கள் முன்வைத்து பேசினார்கள். நிறைவாக, தான் செய்தது பெரும் தவறு என்பதை சண்முகம் சரவணன் ஒப்புக்கொண்டார். ‘சிலரது தவறான வழிகாட்டுதலின் பேரில் இவ்வாறு நிகழ்ந்து விட்டதாகக்’ கூறி வருத்தம் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்சிபிஎச் நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை: பொதுவெளியில் இந்த விஷயம் பேசப்பட்டு விட்டதாலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்சிபிஎச் நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை என்ற விவாதம் முன்வைக்கப்பட்டதாலும், கட்சி அணிகள் கடும் கோபமடைந்திருக்கின்றன. உரிய மாறுதல்களைச் செய்யாமல் பழைய நிலையிலே தொடர்வது சாத்தியமில்லை. அவர் பெயரில் மாற்றப்பட்ட பங்குகள் அனைத்தையும் திரும்பத் தர வேண்டும், இயக்குனர் குழு கூட்டத்தை நடத்தாமல் அவர் நியமித்த ஒன்பது இயக்குனர்களை திரும்பப் பெற வேண்டும் என்ற செயற்குழு முடிவு அவர்களிடம் கூறப்பட்டது. தனது கருத்துக்களை முன்வைத்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டாலும், இறுதியில் கட்சி முடிவை ஏற்பதாக சண்முகம் சரவணன் ஒப்புதல் அளித்தார். இதற்கான ஆவணங்களில் எல்லாம் கையெழுத்திட்டதோடு, அப்போதே இயக்குனர் கூட்டமும் நடத்தப்பட்டு நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட்டது.

என்சிபிஎச் நிறுவனத்தின் புதிய தலைவராக . ஸ்டாலின் குணசேகரன் ஹேர்வு: என்சிபிஎச் நிறுவனத்தின் புதிய தலைவராக த. ஸ்டாலின் குணசேகரன், நிர்வாக இயக்குனராக க. சந்தானம் ஆகியோரை இயக்குனர் குழு கூட்டம் தேர்வு செய்தது[1]. நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் சண்முகம் சரவணன் தொடர்ந்து பணிபுரிவார்[2]. நிறுவன மேம்பாட்டுக்காக தனது பங்களிப்பைச் செலுத்துவார் என்றும் முடிவு செய்யப்பட்டது. சட்ட ஆலோசகராக கோ.பாண்டியன் செயல்படுவார் . இந்தச் சுமூகத் தீர்வின் அடிப்படையில் இரு தரப்பிலும் தரப்பட்ட புகார்கள், வழக்குகளை திரும்ப பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சி ஒற்றுமையாக நின்று இந்த பதட்டமிக்க பிரச்சனையை எதிர்கொண்டது. தமிழ்நாட்டின் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், நிர்வாக அதிகாரிகள் இன்னும் பலரும் அக்கறையோடு விசாரித்தனர். இதில் தீர்வு காணப்பட வேண்டும் என விரும்பினார்கள். ஒத்துழைப்பு செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது நன்றி. வாழ்த்துக்களுடன்….

.ஸ்டாலின் குணசேகரன் யார்?: தமிழகத்தின் முன்னணி பதிப்பகங்களில் ஒன்றான நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தலைவராக ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்[3]. நியூ செஞ்சுரி புத்தக நிறுவன சேவைப் பணிகளுடன் தன்னை பள்ளிக் காலத்திலிருந்தே ஈடுபடுத்திக் கொண்டவர் த.ஸ்டாலின் குணசேகரன். இந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறார்[4]. “கம்யூனிஸ்டாக”கைருந்தாலும், ஏதோ மேடை பேச்சாளர் போல, கல்லூரிகளுக்கு எல்லாம் சென்று பேசி வருவது கவனிக்கத் தக்கது. சரித்திர மாநாடு கூட்டம் கூட, ஒரு முறை பேச வைத்துள்ளது. அதாவது, இடதுசாரிகளை இவ்வாறு ஊக்குவிக்கும் நிலையில், வலதுசாரிகளை தமிழகத்தில் விரோதிகள் போலவே மதித்து வருகிறார்கள். ஆக, அதில், இவர்களுக்கு என்ன புனிதம், புனிதத்துவம், சுத்தம், முதலியன உள்ளது அல்லது அவர்களிடம் ஒவ்வாதது, அசுத்தம் முதலிய உள்ளது என்று தெரியவில்லை.

.ஸ்டாலின் குணசேகரன் பணியை மற்றவர் செய்யவில்லையா?: வாசகர்களின் வாசிப்பை வளப்படுத்தும் விதத்தில் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து பல மக்கள் இயக்கங்களை இவர் நடத்தி வருகிறார். கடந்த 18 ஆண்டுகளாக இவர் நடத்திவரும் ஈரோடு புத்தகத் திருவிழா உலகத் தமிழர்களிடம் தனிப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் ரூ. 5 லட்சத்தில் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் புதிய நூலகக் கட்டடம் கட்டி அதற்கு 6,000 புதிய புத்தகங்களை வழங்கியுள்ளார். இதேபோன்று பல நூலகங்கள் உருவாவதற்கு இவர் காரணமாக இருந்துள்ளார். தமிழகத்தின் பல பகுதிகளிலும் மக்கள் சிந்தனைப் பேரவையின் வாசகர் வட்டம் தொடங்கி அவற்றை வழிநடத்தி வருகிறார். இவர் தனது இல்லத்தில் சுமார் 20,000 நூல்களைக் கொண்ட நூலகம் வைத்துள்ளார். பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ என்ற இவரது தொகுப்புநூல் தமிழகத்தின் முக்கிய வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது. புதிய நிர்வாக இயக்குநராக க.சந்தானம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்டாலின் குணசேகரனுக்கு முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தலைவர் பொறுப்பை வகித்துள்ளார்.

சட்டப் படி எனும்பொழுது செல்லத்தானே செய்வார்கள்:. இருப்பினும், ஒன்றும் நடக்காது……

  • பங்குகளை மாற்றுவதில் செய்யப்பட்டிருந்த முறைகேடுகளை நிரூபிக்க தெளிவான ஆவணங்கள் நம்மிடம் இருந்தன.
  • அவற்றை வைத்து நாமும் காவல்துறையில் புகார் தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
  • தனக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவ்வாறு ஏற்படுத்தியவரை பற்றி காவல் நிலையத்தில் புகார் செய்வது தானே சட்டம் விதித்துள்ள நடைமுறை.
  • ஓம்ரேடுகள் கொடுத்த ஆவணங்களை காவல்துறை பரிசீலித்தது,
  • முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்தது, அதாவது காம்ரேடுகள் கொடுத்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்ட்து, உஊதியானது.
  • போலீஸார் அதற்குரிய பிரிவுகளில் வழக்கு போட்டது.
  • சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய தேடியது.

ஆக இந்நிலையில் தான், “Out of court settlement” – அவுட் ஆப் கோர்ட் செடில்மென்ட் பாணியில் சென்று சமரசம் செய்து கொள்வார்கள் போலும். ஆக போலீஸ் புகார் வாபஸ் வாங்கப் படும், அதன்படி, நீதிமன்ற மனு வாபஸ் வாங்கப் படும், ஒன்றுமே இல்லாதது போன்று விவகாரம், சமாசாரம், கம்யூனிஸ மறைப்பு சித்தாந்தம் மூலமாக மறைந்து விடும்….

© வேதபிரகாஷ்

27-05-2023


[1] தமிழ்.புக்ஸ்.காம், என் சி பி எச் பிரச்சினைக்கு தீர்வுஇரா முத்தரசன், May 25, 2023

[2] https://bookday.in/solution-to-ncph-problem-by-mutharasan/

[3] தினமணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தலைவராக .ஸ்டாலின் குணசேகரன் தேர்வு, By DIN  |   Published On : 27th May 2023 08:43 AM  |   Last Updated : 27th May 2023 08:43 AM  |

[4] https://www.dinamani.com/tamilnadu/2023/may/27/mr-stalin-gunasekaran-selected-as-the-president-of-new-century-book-house-4012338.html

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் – லாபம் என்ன – பங்குகள், பங்குதாரர்கள் என திடீரென்று பிரச்சினை வந்துள்ளது ஏன்? போலீஸ் புகார், நீதிமன்றத்தில் வழக்கு தேவையா? (3)

மே 28, 2023

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் – லாபம் என்ன – பங்குகள், பங்குதாரர்கள் என திடீரென்று பிரச்சினை வந்துள்ளது ஏன்? போலீஸ் புகார், நீதிமன்றத்தில் வழக்கு தேவையா? (3)

என்சிபிஎச் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளது: என்சிபிஎச் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறோம்.. ஒரு மாத காலத்திற்கு மேல் இது பெரிதும் பேசப்படும் பொருளாக அமைந்துவிட்டது. கவலையும், கோபமும், வருத்தமும் கொண்டு பல தோழர்கள் நேரிலும் தொலைபேசியிலும், சிலர் சமூக ஊடகங்களிலும் இது பற்றி பேசிக் கொண்டே இருந்தார்கள். ‘இல்லாத சொத்துக்கு உரிமை கொண்டாடும் சிபிஐ’ என்று மின்னம்பலத்தில் திரு ராஜதுரை லாவணியை தொடங்கி வைத்தார். எப்படி கபளீகரம் செய்யப்பட்டது என்சிபிஎச் என்று ‘அறம்’ மின் இதழில் சாவித்திரி கண்ணன் தொடர்ந்தார். இந்திய கம்யூனிஸ்ட் பதிப்பக சர்ச்சை என்று ஜூனியர் விகடன் கட்டுரை வெளியிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உரிமையாளர் யார் என பதிலையும் கேள்வியையும் கலந்து கொடுத்தது பிபிசி செய்தி நிறுவனம். நக்கீரனிலும் ஒரு விபரமான கட்டுரை வந்தது. இன்னும் பல இதழ்களில் இருந்து, என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்டு கேள்விகள் வந்து கொண்டே இருந்தன.

உண்மையை மறைக்கும் முயற்சி தான் காணப்ப் படுகிறது: முதலாவது கட்டுரை வன்மமும், அகங்காரமும், மேட்டிமையும் கலந்து, தன் விருப்பத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீது அவதூறுகளைப் பொழிந்து வந்தது. அந்தத் தலைக்கனமிக்க கட்டுரையையும், எழுதியவரையும், எதிர்வினை ஆற்றிய தமிழ்ச் சமூகம் துண்டு துண்டாகக் கிழித்தெறிந்தது. மற்ற கட்டுரைகளில் சில உண்மைகளையும், அவர்களிடம் சொல்லப்பட்ட சில கற்பனைகளையும், கட்டமைக்கப்பட்ட பொய்களையும் சேர்த்தும் திரித்தும், ஆர்வமூட்டும் முடிச்சுகளுடன் எழுதப்பட்டிருந்தன. ஒரு கட்டுரையை வெளியிட்டால் அதில் கொஞ்சம் சுவாரசியம் இருக்க வேண்டும் என்றுதான் கட்டுரையாளர்கள் நினைப்பார்கள். நல்ல விவரங்களைக் கொண்ட நக்கீரன் கட்டுரையிலும் கூட மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் சின்னம் பொறித்த செங்கொடி இடம் பெற்றிருந்தது. சில கட்டுரைகளில் கட்சியிடம் கேட்கப்பட்ட கருத்துகளும் இடம் பெற்றிருந்தன. “இது பெரிதுபடுத்த வேண்டிய விஷயம் அல்ல சுமூகமாக தீர்வு காணப்பட்டு விடும்” என்பதையே கட்சி தனது பதிலாக இவற்றில் கூறியிருந்தது. இதை இந்த அளவுக்கு பொதுவெளியில் விவாதிக்கப்படும் வகையில் வளர்த்திருக்க வேண்டுமா? சுமுகமாக பேசி தேர்வு செய்திருக்கக் கூடாதா என்று தோழர்கள் ஆதங்கப்படுவதில் நியாயம் உள்ளது.

கம்பெனி எனும் பொழுது லாபத்தைப் பிரிப்பதில் /  அனுபவிப்பதில் தான் பிர்ச்சினை: 72 ஆண்டுகளுக்கு முன்னால் துவக்கப்பட்ட என்சிபிஎச் நிறுவனம், நமது முந்தைய தலைமுறையால் பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக பதிவு செய்யப்பட்டது. நமது தலைவர்கள் எத்தகைய பெரும் பங்களிப்பைச் செய்து, இந்த நிறுவனத்தை வளர்த்தெடுத்தார்கள் என்ற விபரம், சென்ற கடிதங்களில் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. நிறுவனத்தை உருவாக்கினால் அதிலிருந்து லாபம் எடுக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாது, ஈட்டப்படும் தொகையை தொகைகளை மீண்டும் மீண்டும் அந்த நிறுவனத்திலேயே முதலீடு செய்ததால் இந்தப் பெரும் வளர்ச்சி கிட்டியது. புத்தகத் தயாரிப்பு, அச்சிடுதல், விநியோகம் மற்றும் விற்பனைக்கான வலைப்பின்னல் அமைப்பு என எல்லாம் அடங்கியதாக தமிழ்நாட்டின் முன்னணி புத்தக நிறுவனமாக என்சிபிஎச் உருப்பெற்றது.

இப்பொழுதுள்ளவர்கள் அனுபவிக்கிறார்கள், சந்தோஷிக்கிறார்கள்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள்தான், நிறுவனத்தின் தலைவர்களாகவும் நிர்வாக இயக்குனர்களாகவும் செயலாளராகவும் பங்குதாரர்களாகவும் இருந்தனர். தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் மாறும்போது, அல்லது இறந்து விடும் போது அவர்களுக்கு பதிலாக வேறு தோழர்களை கட்சி இயக்குனர்களாக பரிந்துரைத்தது. பங்குகளும் அவர்களது பெயர்களில் பகிர்ந்து வைக்கப்பட்டது. இரண்டரை ஏக்கர் பரப்புள்ள அம்பத்தூர் தலைமை நிலையம், ராயப்பேட்டையில் உள்ள பாவை அச்சகம், பல்வேறு ஊர்களில் உள்ள புத்தக நிலையங்கள் இவற்றையெல்லாம் அரும்பாடு பட்டு உருவாக்கிய நமது தலைவர்கள் யாரும், தமது பங்கை எடுத்துச் சென்றதோ, சொந்தம் கொண்டாடியதோ இல்லை என்பது மட்டுமல்ல, அவ்வாறு அவர்கள் நினைத்தது கூட இல்லை. புத்தகங்களை விற்பனை செய்வது மட்டுமல்லாமல், சாமானிய குடும்பங்களின் குழந்தைகள் பயில்வதற்கான பள்ளிக்கூடம், மருந்தகங்கள், மருத்துவமனை ஆகியவற்றையும் துணை நிறுவனங்களாக என்சிபிஎச் இயக்குகிறது.

பங்குகள் மாற்றுவது என்பது டிவிடென்ட் பெறுவதற்கா யக்குனராக இருந்து அனுபவிப்பதற்கா?: நிறுவனத்தின் இயக்குனர்களாக இருந்த தோழர்கள் தா. பாண்டியன், எம். எஸ். தாவூத் ஆகிய தோழர்கள் இறந்துவிட்டதால், அந்த இடத்துக்கு தோழர்கள் இரா.முத்தரசன், க.சந்தானம் ஆகியோர் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டார்கள். பின்னர்தான், நிறுவனத்தின் தலைவராக இருந்த தோழர் ஆர் நல்லகண்ணு அவர்களின் பெயரில் இருந்த பங்குகள் உட்பட பலரிடமிருந்த பங்குகள் ஒருவரின் பெயருக்கு மாற்றப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. தோழர் இரா. நல்லகண்ணு அவர்களிடமிருந்து எடுத்த பங்குகளை திரும்ப அவருக்கே மாற்றம் செய்யுமாறு நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்த சண்முகம் சரவணன் அவர்களிடம் கட்சி கூறியது. அவரும் அதைச் செய்து தருவதாகவே 16.2.2023ல் உறுதி அளித்தார். ஆனால் நாள் கடத்திக் கொண்டு சென்றாரே தவிர ஒப்புக்கொண்டதை செய்யவில்லை. 16.3.2023 அம்பத்தூரில் நடந்த என்சிபிஎச் இயக்குனர் குழு கூட்டத்திலும் இது வலியுறுத்தப்பட்டது. ஆனால் தனக்கு மறுநாள் வரை கால அவகாசம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன் பின்னரும் அவர் எந்த பதிலும் கூறவில்லை. 19.3.2023 அவரது வீட்டுக்கே தோழர்கள் கோ.பழனிச்சாமி, வை.சிவபுண்ணியம் இருவரும் தேடிச்சென்று சந்தித்துப் பேசினர். அன்று நடைபெற்றுக் கொண்டிருந்த கட்சியின் மாநிலக் குழு கூட்டத்திற்கு, சண்முகம் சரவணனை அழைத்து வந்தனர். அவர் என்சிபிஎச் கட்சி கிளையின் சார்பில் மாநிலக் குழுவில் உறுப்பினராக இடம் பெற்று இருக்கிறார்.

ஆக அதுதான் பிரச்சினை: அன்று இரவு செயற்குழு கூட்டத்திற்கு அவரை அழைப்பாளராக அழைத்துப் பேசியபோது, அவரே ஐந்து தோழர்களை இயக்குனர்களாக வைத்துக் கொண்டு, பங்குகளை பகிர்ந்து தரலாம் என்று தெரிவித்தார். கூடுதலாக இரண்டு தோழர்களை சேர்க்கலாமா என்று கேட்டபோது அதையும் ஒத்துக் கொண்டார். அவர்களை இயக்குனர்களாக நியமிப்பதற்கான ஆவணங்களையும் வாங்கிச் சென்றார். ஆனால் அதன் பின் தானே முன்மொழிந்த அந்த ஆலோசனைகளை அமுல் நடத்த மறுத்துவிட்டார். அதன் பின்பு 20 ஏப்ரல் 23, 24, 27, 28 ஆகிய தேதிகளில் அவருடன் தொடர்பு கொண்டு பேசிய போது தான் சென்னையில் இல்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தார். கடைசியில் ஏப்ரல் 27ஆம் தேதி பாலன் இல்லம் வருவதாக உறுதியளித்தார். ஆனால், நிறுவனத்திற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், 15 இயக்குனர்களை தான் நியமித்து விட்டதாகவும் வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்ட எழுத்துப்பூர்வமான தகவல் நமக்கு கிடைத்தது.

போலீஸிடம் புகாராகவும் சென்றாகி விட்டது – மிரட்டலுக்கு மட்டும் தான்: அதன் பின்னும் சமூகத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு 28.4.2023ஆம் தேதி அன்று கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் டி ராஜா அவர்களே நேரடியாக அம்பத்தூரில் உள்ள என்சிபிஎச் அலுவலகத்திற்குச் சென்றார். தோழர்கள் இரா.நல்லகண்ணு, கோ.பழனிச்சாமி, வை. சிவபுண்ணியம், டி இராமசாமி இயக்குனர் ஸ்டாலின் குணசேகரன் வழக்கறிஞர் கோ பாண்டியன் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி, தெற்கு மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி ஆகியோரும் அவருடன் சென்றனர். அவர்களிடம் 2.5.2023 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு கட்சி அலுவலகத்துக்கு வந்து ஏற்கனவே பேசிய வகையில் தீர்வு செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் 1.5.2023 ஆம் தேதி அன்று அம்பத்தூர் காவல் நிலையத்தில் மேலே குறிப்பிட்ட தோழர்கள் தங்களை அலுவலகத்துக்குள் வந்து மிரட்டியதாக காவல்துறையில் என்சிபிஎச் சார்பில் புகார் செய்தார்கள். மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, கோ.பழனிச்சாமி, நா.பெரியசாமி, வை.சிவபுண்ணியம், வழக்கறிஞர் கோ.பாண்டியன் மற்றும் நிறுவனத்தின் இயக்குனர்களான இரா முத்தரசன், க.சந்தானம் ஆகியோர் என்சிபிஎச் அலுவலகத்துக்குள் நுழையக்கூடாது எனத் தடை உத்தரவும் பெற்றார்கள்.

© வேதபிரகாஷ்

27-05-2023

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் – லாபம் என்ன – பங்குகள், பங்குதாரர்கள் என திடீரென்று பிரச்சினை வந்துள்ளது ஏன்? குழந்தைகள் புத்தகங்கள் முதல் கம்யூனிஸம் வரை! (2)

மே 28, 2023

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்லாபம் என்னபங்குகள், பங்குதாரர்கள் என திடீரென்று பிரச்சினை வந்துள்ளது ஏன்? குழந்தைகள் புத்தகங்கள் முதல் கம்யூனிஸம் வரை! (2)

நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் பின்னணி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கான பத்திரிகையாக 1937 முதல் ஜனசக்தி வெளியான நிலையில், அந்தப் பெயரிலேயே புத்தகங்களும் வெளிவந்துகொண்டிருந்தன. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, கட்சிக்கென வெற்றிகரமாகச் செயல்படக்கூடிய பதிப்பகம் தேவை என்பது உணரப்பட்டது. இதையடுத்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என்ற பெயரில் ஒரு பதிப்பகம் உருவாக்கப்பட்டது. ஆனால், அதனை கட்சியின் ஒரு அங்கமாக அல்லாமல், பிரைவேட் லிமிட்டெட் நிறுவனமாகவே நடத்துவதுதான் சிறப்பானதாக இருக்கும் என முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 1951ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி இந்த நிறுவனம் பதிவுசெய்யப்பட்டது. நிறுவனம் துவங்கப்பட்டபோது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் ஜீவா, பி. ராமமூர்த்தி உள்ளிட்ட நான்கு பேர் பங்குதாரர்களாகவும் இயக்குநர்களாகவும் இருந்தனர். ராமகிருஷ்ண மூர்த்தி என்பவர் முழுநேர நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவருக்கும் பங்குகள் ஒதுக்கப்பட்டன. நிர்வாக இயக்குநரின் தலைமையில் ஒரு தனியார் நிறுவனமாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் செயல்பட ஆரம்பத்தது.

குழந்தைகள் புத்தகங்கள் போர்வையில் கம்யூனிஸ புத்தக வியாபாரம் செய்தது: சோவியத் யூனியன் காலகட்டத்தில், கட்சிக் கொள்கைகளைப் பரப்ப புத்தகங்களை தமிழிலேயே ரஷ்யாவில் அச்சடித்து தமிழகத்தில் விற்பனை செய்ய விரும்பியபோது, விநியோகப் பொறுப்பு என்சிபிஎச்சுக்கு வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் என்சிபிஎச் தமிழ்நாட்டின் மிகப் பிரபலமான புத்தக நிறுவனமாக உருவெடுத்தது. சோவியத் ரஷ்யாவிலிருந்து வந்த வண்ண மயமான குழந்தைகள் நூல்களும் அறிவியல் புத்தகங்களும் என்சிபிஎச்சின் பெயரை வீடு தோறும் கொண்டு சேர்த்தன. சோவியத் யூனியன் நொறுங்கி, அங்கிருந்து புத்தகங்கள் வெளிவருவது நின்றுபோன நிலையில், பாடப் புத்தகங்களின் திசையில் கவனம் செலுத்த ஆரம்பித்தது என்சிபிஎச். தற்போது பல பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் தேவையான புத்தகங்களை அச்சிடுவது, வெளியிடுவது என ஆண்டுதோறும் 20 கோடி ரூபாய் அளவுக்கு விற்றுமுதல் செய்கிறது இந்த நிறுவனம். பொதுவுடமை சார்ந்த நூல்களும் பொது நூல்களும் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வெளியிடப்படுகின்றன.

பங்குகள் மற்றொருவருக்கு மாற்றிக்கொடுக்கப்படுவது: இந்த நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள யாராவது ஒருவர் இறந்தாலோ, கட்சியை விட்டு விலகினாலோ அந்தப் பங்குகள் மற்றொருவருக்கு மாற்றிக்கொடுக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தற்போது என்சிபிஎச்சின் இயக்குநர்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு, அக்கட்சியின் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டச் செயலாளர் வீரசேனன், கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், கல்விப் பிரிவின் பொறுப்பாளரும் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான கா. சந்தானம், எழுத்தாளர் ஸ்டாலின் குணசேகரன், நிர்வாக இயக்குநராக சண்முக சரவணன் ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன், நல்லகண்ணு ஆகியோர் வசம் உள்ள பங்குகள் சண்முக சரவணன் பெயருக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், இப்படி மாற்றப்பட்டது முறையல்ல எனக் கருதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், சண்முக சரவணன் தன்வசம் உள்ள பங்குகளை கட்சி கூறும் நபருக்கு மாற்றிக்கொடுக்க வேண்டுமென கூறுவதாக சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன்பாக தகவல்கள் வெளியாக ஆரம்பித்தன. இதையடுத்து சண்முக சரவணன் தரப்பின் சார்பில் பலருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன. அந்த மின்னஞ்சலில் “நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஒரு பிரைவேட் லிமிடட் நிறுவனமாக இயங்குவதுதான் அதன் தன்மைக்கு உகந்தது என்ற ஓர்மை உணர்வோடும் தொலைநோக்கோடும் அதனைக் கட்டி எழுப்பியவர்கள் அவ்வாறு அதனைப் பதிவு செய்தனர்.

பங்குகளை வைத்து சுயலாபம் பெறவோ, மற்றவர்களுக்கு விற்கவோ, வாரிசுதாரர்கள் அடையவோ முடியாது: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் பங்குகளை வைத்து சுயலாபம் பெறவோ, மற்றவர்களுக்கு விற்கவோ, வாரிசுதாரர்கள் அடையவோ முடியாத அளவிற்கு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல கட்டங்களில் அடுத்தடுத்து வந்த இயக்குநர்கள், நிர்வாகிகள் பெயரில் பங்குகள் மாற்றிக் கையளிக்கப்படுவதும் நிர்வாகமும் இயக்கமும் தொடர்ச்சி அறாமல் மக்கள் பணியாற்றியதுமே வரலாறு. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுண்டபோதும் கூட இந்த நடைமுறையும் தொடர்ச்சியும் பிரச்சினையில்லாமல் தொடர்ந்தது. அந்த அளவிற்கு நிறுவனத்தின் கூட்டமைப்பு ஷரத்துகளும் (Articles of Association) புரிந்துணர்வு ஒப்பந்தமும் (Memorandum of Understanding) வரையப்பட்டு, இந்த மரபு தொடர்ந்துள்ளது. கட்சித் தலைவர்களாகவும், நிர்வாக வாரிய உறுப்பினர்களாகவும், பிரைவேட் லிமிடெட் என்பதற்கான இலக்கணப்படி பங்குதாரர்களாகவும் இருப்பவர்களும் இதுவரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் தினசரி நிர்வாக செயல்பாடுகளில் தலையிட்டதில்லை. நியூசெஞ்சுரி புத்தக நிறுவனமோ, பணியாளர்களோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக ஒருபோதும் செயல்பட்டதில்லை. இன்றைக்கும் செயல்படவில்லை; அதற்கான அவசியமும் இல்லை.

ஓய்வுகால சரணாலயமாக நியூ செஞ்சரி புத்தக நிறுவனத்தை பயன்படுத்திக் கொள்வது: 75 வயதிற்கு மேல் கட்சி பொறுப்புக்கு வர முடியாது என்ற முடிவு அண்மையில் தேசிய மாநாட்டில் எடுக்கப்பட்டது. அப்படி ஓய்வு பெறுவதற்கு விருப்பம் இல்லாத சிலர் ஓய்வுகால சரணாலயமாக நியூ செஞ்சரி புத்தக நிறுவனத்தை பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது தான் தற்போதைய பிரச்சனை. பங்குகளை சிலரின் பெயருக்கு மாற்றவும் இயக்குநராக நியமிக்கவும் தற்போது உள்ள நிர்வாகிகள் மிரட்டப்படுகின்றனர். காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. பொய் வழக்கு போடப்படுகிறது. பொறுப்புக்கு வர ஆசைப்படுகின்றவர்கள் நிறுவனத்தின் தொடர்ச்சியான இயக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதவர்கள். அவர்கள் சுயநலத்தின் காரணமாகத்தான் நிறுவனத்தில் அதிகாரம் செலுத்த முயல்கின்றனர் என்பதால் தா. பாண்டியன், ஆர் நல்லகண்ணு ஆகியோர் தங்கள் பெயரிலுள்ள பங்குகளை மேலாண்மை இயக்குனர் சண்முக சரவணன் பெயருக்கு மனமுவந்து எழுதி கொடுத்துள்ளனர். ஆனால் அவர்களை ஏமாற்றி சதி செய்து வாங்கியதாக தரம் தாழ்ந்து குற்றம் சாட்டப்படுகிறது,” என்று கூறப்பட்டிருந்தது. இந்தப் பிரச்சனை முற்றிய நிலையில், சென்னை அம்பத்தூரில் உள்ள அந்தப் பதிப்பகத்தின் அலுவலகத்தில், கட்சியைச் சேர்ந்த சிலர் சென்று பங்குகளை மாற்றித்தர வேண்டுமென சத்தம்போட்டதாக சண்முக சரவணன் தரப்பினர் கூறுகின்றனர். மேலும் காவல் துறையிலும் சண்முக சரவணன் மீது புகார் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

என்.சி.பி.எச் மற்றும் பாவை பிரிண்டர்ஸ்: தற்போது சண்முகம் சரவணன் தலைமறைவாகியிருக்கும் நிலையில், அவரது சார்பில் பேசியவர்கள், “தற்போது நியூ செஞ்சுரி புக் ஹவுசில் 300 பேர் பணியாற்றுகின்றனர். அதன் மற்றொரு நிறுவனமான பாவை பிரிண்டர்ஸில் 100 பேர் வரை பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனத்தைப் பொறுத்தவரை, நிறுவனத்திலிருந்து கிடைக்கும் லாபத்தை பங்குதாரர்கள் எடுத்துக்கொள்ள முடியாது. அது மீண்டும் முதலீடுதான் செய்யப்படும். இதில் பணியாற்றுபவர்கள் மூலம் கட்சிக்கு லெவியாக ஒரு தொகை அனுப்பப்படும். கட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் என்சிபிஎச் இருப்பதில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் பதிப்பகத்திற்கு ஆணையிட முடியாது. என்சிபிஎச் மீது கட்சியின் சித்தாந்தரீதியான பிடியை வைத்துக்கொள்ளலாம். இது கட்சிக்கு கடமைப்பட்டுள்ள நிறுவனமே தவிர, கட்சி கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மூத்த தலைவர்களிடமிருந்து மிரட்டி எழுதி வாங்கியதாக புகார் சொல்கிறார்கள். அப்படிச் செய்ய முடியுமா? மேலும், அப்படி எழுதிக் கொடுத்த பிறகும் நல்லகண்ணு பல முறை நிறுவனத்திற்கு வந்திருக்கிறார். அதன் செயல்பாட்டை புகழ்ந்திருக்கிறார். மிரட்டி எழுதி வாங்கியிருந்தால் அப்படிச் செய்திருப்பாரா?” என்கிறார்கள்.

என்.சி.பி.எச் கம்பனி தான் பிறகு அதில் என்ன பிரச்சினை?: இந்த விவகாரம் குறித்து, என்சிபிஎச்சின் இயக்குநர்களில் ஒருவரும் இந்திய கம்யூன்ஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான கா. சந்தானத்திடம் கேட்டபோது, “நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சண்முக சரவணன், அந்த நிறுவனத்தை கம்பனி சட்டப்படி நடத்த நினைக்கிறார். ஆனால், நாங்கள் அது கட்சியின் ஸ்தாபனம் எனக் கருதுகிறோம். அவர் இதனை ஒப்புக்கொண்டு, வந்துவிடுவார் எனக் கருதுகிறோம். இதைத் தவிர இந்த சந்தர்ப்பத்தில் வேறு எதையும் நான் சொல்ல விரும்பவில்லை,” என்றார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாரன முத்தரசனிடம் கேட்டபோது, “இந்தப் பிரச்சனையைப் பேசித் தீர்த்துவிடலாம் என்று கருதுகிறோம். இதனை மேலும் மேலும் பெரிதாக்கத் தேவையில்லை,” என்று மட்டும் குறிப்பிட்டார். தற்போது இந்த விவகாரம் குறித்து இரு தரப்பும் இந்த வார இறுதியில் பேசவுள்ளதாகத் தெரிகிறது. ஒரு சுமூக முடிவு எட்டப்படும் என பதிப்பக பொறுப்பில் உள்ளவர்களும் கட்சியின் மூத்த தலைவர்களும் நம்புகின்றனர்.

© வேதபிரகாஷ்

27-05-2023

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் – லாபம் என்ன – பங்குகள், பங்குதாரர்கள் என திடீரென்று பிரச்சினை வந்துள்ளது ஏன்? (1)

மே 28, 2023

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்லாபம் என்னபங்குகள், பங்குதாரர்கள் என திடீரென்று பிரச்சினை வந்துள்ளது ஏன்? (1)

பல ஆண்டுகளாக புதிராக காணப்படும் என்.சி.பி.எச்: 1980களிலிருந்து நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கட்டிடத்தை [New Century Book House ] வருவாய் துறையினர், குறிப்பாக மதித்திய கலால், சுங்கம், ஜிஎஸ்டி போன்றவை கவனித்து வருகின்றனர். நம்பர்.1, சிட்கோ இன்டெஸ்டிரியல் எஸ்டேட் என்று அங்கு தான் ஆரம்பிக்க வேண்டும். சர்வே எடுப்பவர்கள் அங்கு சென்றாலும், ஏதோ மழுப்பி அனுப்பி விடுவர். பொதுவாக, ஏதாவது பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் தான், அந்த இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில், பேக்டரி ஷெட்டைப் பெற முடியும், ஆக, அவ்வாறு சொல்லித் தான் இடம் ஒதுக்கீட்டு முறையில் வாங்கியிருக்கிறார்கள். இன்று அதன் மதிப்பு கோடிகளில், அதிலும், ஐடி அல்லது இம்.என்.சி கம்பெனிகள் தயாராக இருக்கின்றன. அப்பொழுது இருந்த இந்தியா போர்ஜ், போன்ற கம்பெனிகள் எல்லாம் மறைந்து விட்டன. ஆனால், என்.சி.பி.எச் உள்ளது. இபொழுது திடீரென்று ஷேர், சொத்து, பங்கீடு என்றெல்லாம் செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. கம்யூனிஸம் பேசும் இந்த முதலாளிகள் இப்பொழுது கோடீஸ்வரர்கள் தாம். அவர்களில் சிலர், ஏதோ சாதாரண ஆட்கள் போன்று சட்டை-வேட்டி கட்டிக் கொண்டு காணப்படலாம், ஆனால், உண்மையில் பெரிய கோடீஸ்வரர்கள் தான்.

என்.சி.பி.எச் பெரும்பான்மைப் பங்குகளை யார் வைத்திருப்பது.?: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புத்தக நிறுவனமான நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் [New Century Book House P Ltd.,] பெரும்பான்மைப் பங்குகளை யார் வைத்திருப்பது என்பது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது[1]. ஆனால், புத்தக நிறுவனம் கட்சிக்கு கட்டுப்பட்டதல்ல என்கிறார்கள் நிர்வாகத்தினர்[2]. இந்த விவகாரத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பதிப்பகப் பிரிவாக அறியப்படும் நிறுவனம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். சென்னையில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு முழுவதும் 20 கிளைகள் உள்ளன. இதன் துணை நிறுவனமாக பாவை பிரிண்டர்ஸ் செயல்படுகிறது. ஆயிரக்கணக்கான புத்தகங்களை இந்த நிறுவனம் இதுவரை வெளியிட்டிருக்கிறது. தற்போது இந்த நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை யார் வைத்திருப்பது என்பது தொடர்பாகவும் யார் அதனைக் கட்டுப்படுத்துவது என்பது குறித்தும்தான் பிரச்சனை எழுந்துள்ளது. அரசியல் கட்சிகள் பதிப்பகங்களை நடத்தும்போது, அந்தக் கட்சியின் ஒரு பிரிவாகவே அந்தப் பதிப்பகம் நடத்தப்படும். அல்லது கட்சித் தலைவர்களை அறங்காவலர்களாகக் கொண்ட அறக்கட்டளைகள் மூலம் அந்த பதிப்பகம் நடத்தப்படும்.

1951ல் ஆரம்பிக்கப் பட்ட என்.சி.பி.எச்: ஏழைத் தொழிலாளிகள் மற்றும் கூலி விவசாயிகளின் கட்சியாக அன்று அறியப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையாக வந்து கொண்டிருந்த ஜனசக்தியின் கிளை நிறுவனமாக முதலில் ஜனசக்தி பிரசுராலயம் என்றும் ஆங்கிலத்தில் பீப்பிள் புக் ஹவுஸ் என்ற பெயரிலும் 1951 வாக்கில் உருவானது. இதற்கு கட்சி தான் முதலீடு செய்து வி.சீனிவாசராவ், ஜீவா, மணலி கந்தசாமி, எம்.ஆர்.வெங்கட்ராமன், வி.பிசிந்தன் போன்றோரை பங்குதார்களாக அறிவித்தது. சில ஆண்டுகளில் சோவியத் யூனியன் உதவி செய்ய முன் வந்தது[3]. எனவே, அந்த உதவியை ஒரு கட்சிக்கு செய்ய முடியாது என்பதால் பிரைவேட் லிமிடெட் ஆக மாற்றப்பட்டது! இதன் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர்கள் யாவருமே கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டனர். எம்.வி.சுந்தரம், மோகன் குமாரமங்களம், பாலதண்டாயுதம், பா.மாணிக்கம், ராதாகிருஷண மூர்த்தி.. போன்ற பலர் இதன் பொறுப்பில் மகத்தான பங்களிப்பு தந்துள்ளனர்[4]. ஊழியர்களுமே கட்சி குடும்பத்து பிள்ளைகள் தாம்!

என்.சி.பி.எச் மற்ற பதிப்பகத்தாருடன் ஒப்பீடு செய்யப் படுவது: இன்றைக்கும் பதிப்பகத் துறையில் கோலோச்சும் ஆர்.எஸ்.சண்முகத்தின் செண்பகா பதிப்பகம், லட்சுமணனின் ஏகம் பதிப்பகம், என்.கே.கிருஷ்ணமூர்த்தியின் ராஜ்குமார் பப்ளிகேஷன்ஸ், ஜெயக்குமாரின் அருணா பப்ளிகேஷன்ஸ், ஆவுடையப்பனின் ஏ.எம்.புக் ஹவுஸ்..போன்ற பத்துக்கு மேற்பட்ட பதிப்பகங்கள் என்.சி.பிஹெச்சில் உழைத்து, களைத்து வெளியேறியவர்களால் ஆரம்பிக்கப்பட்டவையே! இது ஒரு வகையில் தனிப்பட்டவர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு, திறமை இவற்றை அங்கீகரித்து பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை தரத் தவறியதன் விளைவாகவும் எடுத்துக் கொள்ளலாம். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு நிறுவனத்தின் உழைப்புக்கு அடிநாதமாக உள்ள உழைப்பாளிகளுக்கு அதன் லாபத்தில் உரிய பங்கை தராமல் அலட்சியப்படுத்தியதன் விளைவு என்றும் சொல்லலாம்.

சண்முகம் சரவணன் என்பவரிடம் அதிக பங்குகள் இருப்பதால் ஆரம்பித்தப் பிரச்சினை: திராவிடர் கழகத்தின் விடுதலை நாளிதழ், தி.மு.கவின் முரசொலி, சி.பி.எம்மின் பாரதி புத்தகாலயம் ஆகியவை இந்த பாணியிலேயே நடத்தப்படுகின்றன. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பதிப்பகமான நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் எனப்படும் என்சிபிஎச், துவங்கும்போதே ஒரு பிரைவேட் லிமிட்டெட் நிறுவனமாகத் துவங்கப்பட்டது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற இந்த நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகள், தற்போது அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள சண்முக சரவணன் வசம் உள்ளன [Shanmukha Saravanan, who is currently the managing director ]. ஆனால், தனி நபர் ஒருவரிடம் பெரும்பான்மைப் பங்குகள் இருப்பதை விரும்பாத கட்சி அமைப்பு, அந்தப் பங்குகளை கட்சி நிர்வாகிகளுக்கு மாற்றித் தரச் சொல்லிக் கேட்கிறது. அதற்கு சண்முக சரவணன் மறுக்கவே விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனமான நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (என்.சி.பி.ஹெச்) நிறுவனம் யாருக்குச் சொந்தம் என்பதில் கட்சிக்கும், என்.சி.பி.ஹெச் நிர்வாக இயக்குநர் சண்முகம் சரவணன் தரப்புக்கும் இடையே பிரச்னை வெடித்திருக்கிறது[5]. ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரே, அந்தக் கட்சியின் பதிப்பக நிர்வாக இயக்குநரிடமிருந்து பங்குகளை எழுதிக் கேட்டு மிரட்டுவதாகவும், இதனால் நிர்வாக இயக்குநர் சண்முகம் சரவணன் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்’ என்றும் தகவல்கள் சிறகடிக்கின்றன[6].

வருட நிகர விற்றுமுதல் வருமானம் ரூ 20 கோடிகள்: இப்பொழுது ரூ 20 கோடிகளுக்கு வருட வருமானம் [20 crore rupees annual turnover] வருகிறது. தற்போது பல பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் தேவையான புத்தகங்களை அச்சிடுவது, வெளியிடுவது என ஆண்டுதோறும் 20 கோடி ரூபாய் அளவுக்கு விற்றுமுதல் செய்கிறது இந்த நிறுவனம். அப்படியென்றால் நிச்சயமாக அதில் கணிசமான லாபம் கோடிகளில் உள்ளது. அதனால், நிச்சயமாக அதை பங்குப் போட்டுக் கொள்வதில் பிரச்சினை வரத்தான் செய்யும். இதில் மார்க்ஸ்-லெனின், பொதுவுடமை எல்லாம் வராது. காசு, பணம், துட்டு, அதிலும் சொத்து-லாபம் எனும் பொழுது, முதலாளிகள் தான், பங்கீடு தான்! பிறகு ஏன் ஓய்வு பெற்று வீடுகளுக்கு செல்லப் போகின்றனர். இருக்கும் வரை இயக்குனர்களாக இருந்து அனுபவிக்கத்தான் செய்வர். அதில் தான் போட்டி, பங்கீடு போட்டி என்பதனை அறிந்து கொள்லலாம்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வாசகர் வட்டம் உறுப்பினர் பணம் என்னவயிற்று?: 1970களில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வாசகர் வட்டம் என்று ஆயுள் உறுப்பினராக ரூ.100/- வசூலித்து அடையாள அட்டையும் கொடுத்தனர். லட்சக்கணக்கில் உறுப்பினர்கள் இருந்தனர். மவுண்ட் ரோட் ஆபிசில் மாதாந்திர கூட்டம் எல்லாம் நடக்கும். ஆக ஒரு லட்சம் உறுப்பினர் என்றாலே ரூ 100 x 1,00,000 = 1,00,00,000/- ஒரு கோடி வருகிறது. இன்றைய மதிப்பு ரூ.10 கோடி. அதாவது, உறுப்பினர்களுக்கு எதாவது கொடுக்க வேண்டும். ஆனால், இன்றைக்கு அது என்னவாயிற்று என்றே தெரியவில்லை. அந்த பணத்தையும் இவர்கள் தான் அனுபவித்து வருகிறார்கள் என்று தெரிகிறது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் [New Century Book House P Ltd.,] என்பதால், அத்தகைய பணத்திற்கு கணக்குக் காட்டியாக வேண்டும். என்ன செய்தார்கள் என்று மார்க்ஸ், லெனின் முதலியோரிடம் கேட்க முடியாது. இப்பொழுதிருக்கும் டைரக்டர்களிடம் தான் கேட்க வேண்டும். என்ன சொல்லப் போகிறர்கள்?

© வேதபிரகாஷ்

27-05-2023


[1] பிபிசி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நியூ செஞ்சுரி புக் ஹவுஸுக்கு , ‘உரிமையாளர்யார்? என்ன பிரச்னை?, முரளிதரன் காசிவிஸ்வநாதன், பதவி, பிபிசி, தமிழ், 23 மே 2023

[2] https://www.bbc.com/tamil/articles/c981r7509npo

[3] அறம், எப்படி கபளீகரம் செய்யப்பட்டது என்.சி.பி.ஹெச்?, சாவித்திரி கண்ணன், May 19, 2023.

[4] https://aramonline.in/13602/ncbh-looting-by-sanmugam-saravanan/

[5] ஜூனியர் விகடன், சொத்துக்காக மிரட்டுகிறார்! – கட்சி நிறுவனத்தை அபகரிக்க நினைக்கிறார்!, ஜூனியர் விகடன் டீம், Published:20 May 2023 5 AMUpdated:20 May 2023 5 AM

[6] https://www.vikatan.com/government-and-politics/politics/new-century-book-house-cpi

கண்ணூர் சரித்திர மாநாட்டில் நடந்தது என்ன – கேரள கவர்னர்-முதலமைச்சர் மோதல் ஏன்? பாடம் எடுக்கும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் வன்முறையில் இறங்கக் கூடாது (2)

செப்ரெம்பர் 24, 2022

கண்ணூர் சரித்திர மாநாட்டில் நடந்தது என்னகேரள கவர்னர்முதலமைச்சர் மோதல் ஏன்? பாடம் எடுக்கும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் வன்முறையில் இறங்கக் கூடாது (2)

கம்யூனிஸ்ட் முதலமைச்சரின் மறைப்பு சித்தாந்த பேச்சுவிளக்கம்: கவர்னரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் பினராயி விஜயன், “அரிப் முகமது கான் கம்யூனிஸ்டுக்கு எதிராக பிரசாரம் செய்துவருகிறார். அவர் பேசுவது முட்டாள்தனமாக உள்ளது[1]…..கவர்னர் பதவியில் இருந்து உங்களை தரம்தாழ்த்திக் கொள்ளாதீர்கள். பதவிக்கு தகுந்தாற்போல் செயல்படுங்கள். கம்யூனிஸ்டுக்கு எதிராக பேச அரசியல் கட்சியினர் உள்ளனர்[2]. அவர்கள் அதை செய்துகொள்வார்கள். கவர்னர் பதவியில் இருந்து அதை செய்யவேண்டாம்,” என்றார் காட்டமாக. மறுபடியும் கம்யூனிஸ முதல்வர், கண்ணூர் சரித்திர மாநாட்டில் நடந்த அடாவடித் தனம், சரித்திராசிரியர்களின் தாக்குதல் மற்றும் ரௌடித் தனம், ஆக்ரோஷமான செயல்கள், முதலியவற்றைப் பற்றி பேசவில்லை. அரசியல் ரீதியாக, திரிபு விளக்கம் கொடுப்பதில் கவனம் காட்டுவது தான் தெரிகிறது. பீஜேபி- ஆர்.எஸ்.எஸ்., தொடர்புகள் எல்லாம் தெரிந்த விசயங்கள் தான், இதில் ஒன்றும் ரகசியம் இல்லை. எப்படி கம்யூனிஸ்டுகள் சீனா, ரஷ்யா என்று அயல்நாட்டு சித்தாந்திகளின் அடிமைகளாக இருக்கிறர்கள் என்பதை மறைக்கப் பார்க்கிறார்கள்.

9-09-2022 – கவர்னரின் பேட்டி: கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தரை மறு நியமனம் செய்ய முதல்வர் பினராய் விஜயன் சட்டத்தை மீறி நேரடியாக தன்னை தொடர்பு கொண்டார் என்று கவர்னர் ஆரிப் முகம்மது கான் கூறியது[3], “கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கவர்னர் மாநில அரசுக்கு எதிராக பத்திரிகையாளர்களை சந்திப்பது மிகவும் அபூர்வமான ஒன்றாகும். இதில் கவர்னர் ஆரிப் கூறியதாவது: கண்ணூரில் சரித்திர மாநாடு நடைபெறும் போது என்னைத் தாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலர் வந்தனர். அவர்கள் ரகளையில் ஈடுபடும்போது மேடையில் இருந்த அப்போதைய எம்பியும், இப்போதைய முதல்வர் பினராய் விஜயனின் தனி உதவியாளருமான ராகேஷ் மேடையிலிருந்து இறங்கிச் சென்று ரகளையில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தார். இதனால்தான் ராகேஷுக்கு தற்போது உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கண்ணூர் பல்கலைக்கழகத்தில் சட்டத்தை மீறி துணைவேந்தரை மறு நியமனம் செய்வதற்கு முதல்வர் பினராய் விஜயன் நேரடியாக என்னை அணுகினார். அவர் தன்னுடைய ஊரைச் சார்ந்தவர் என்றும், எனவே மீண்டும் நியமனம் செய்ய வேண்டும் என்றும் என்னிடம் அவர் கூறினார்.

கொடுத்த வாக்கை மீறிய முதலமைச்சர்: கவர்னர் கூறியது,“பல்கலைக்கழக நியமனங்களில் சட்டத்தை மீறி எதுவும் நடைபெறாது என்று எழுத்து மூலம் பினராய் விஜயன் என்னிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அதன் பின் விதிமுறைகளை மீறி பல நியமனங்கள் நடந்தன. இதனால்தான் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை நான் எதிர்த்தேன். கேரளாவில் உள்ள ஒரு எம்எல்ஏ நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார். இன்னொரு எம்எல்ஏ அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுகிறார். இங்குள்ள அரசு மாநிலத்தின் வளர்ச்சி குறித்து கவலைப்படுவதில்லை. தங்களை எதிர்ப்பவர்களை அடக்கி அவர்களது வாயை மூடவே விமர்சிக்கின்றனர்”. இவ்வாறு அவர் கூறினார்[4]. கேரள அரசுக்கும், முதல்வர் பினராய் விஜயனுக்கும் எதிராக கவர்னர் ஆரிப் முகம்மது கான் கூறியுள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்தாந்திகள் மற்றவர்களைப் பற்றி குறை சொல்ல முடியாது: இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு திருச்சூருக்கு வந்திருந்த ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தை, கேரள கவர்னர் ஆரீப் முகமது கான் சந்தித்துப் பேசினார்[5]. இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், முன் கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும், கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன[6]. இதிலும் ஒன்றும் பெரிய ஆச்சரியமான விசயம் இல்லை. சீன மற்றும் ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர்கள் வந்தால், இந்த கம்யூனிஸ்ட் முதலமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்ற அரசியல்வாதிகள் சென்று சந்திப்பது வழக்கம் தான். அவ்வளவு ஏன், சீன மற்றும் ரஷ்ய நாடுகளில் மாநாடுகள் நடந்தாலே, இவர்கள் சென்று பங்கு கொண்டு வருகிறர்கள். சீன ஆக்கிரமிப்புகள், எல்லை அடாவடித் தனங்கள், பொருட்களை வரியில்லாமல் இந்திய சந்தைகளில் குவிப்பது போன்றவற்றைப் பற்றியும் மூச்சுவிட / கண்டுகொள்ள மாட்டார்கள்.

மத்தியமாநில அரசுகளின் மோதல் போக்கு மக்களுக்கு எந்த பலனையும் அளிக்காது: தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் திமுக அரசு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இடையேயான முரண்பாடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் தராமல் இருப்பதில் முன்னணி பாத்திரம் வகிப்பவர் ஆளுநர் ரவி. தெலுங்கானாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் முதல்வர் கேசிஆருக்கும் இடையே பகிரங்க மோதல் நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரை இல்லாமல் சட்டசபை கூட்டத்தை நடத்திய பெருமைக்குரியவராக மாறிவிட்டார் கேசிஆர். தெலுங்கானா அரசுக்கும் தமக்கும் இடையேயான மோதலை குமுறல் போல அண்மையில் தமிழிசை கொட்டி இருந்தார். இதனை திமுகவின் முரசொலி கிண்டலடித்துவிட்டது. புதுச்சேரியில் பாஜக கூட்டணி அரசுதான்.. ஆனாலும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுடன் மல்லுக்கட்டுதான். இப்படியெல்லாம் ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன. ஆளும் கட்சியினருக்கு ஜால்றா அடித்து பிழைக்க வேண்டிய நிலையில் இருப்பதால், அவர்களும் உண்மைக்குப் புறம்பான, சட்ட விவரங்களை அறியாமல் அல்லது மறைத்து, ஏதோ தமாஷாக பொழுது போக்கு விசயங்கள் போல, இவற்றைப் பற்றி செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். இந்த போக்கு தான் பாரபட்சத்தை உண்டாக்கி, நடுநிலையை கொல்லும் நிலைக்கு எடுத்துச் செல்கிறது.

மாணவமாணவியர்களுக்கு வேண்டியது என்ன?: இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது, கீழ்காணும் விசயங்கள் ஆகும்.

  1. பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் நடக்கும் விதம், மாணவ-மாணவியர்களுக்கு உபயோகமாக இருக்கும் நிலை;
  2. அவற்றில் இருக்கும் கட்டமைப்புகள், பரிசோதனை கூடங்கள், கணினி பயன்பாட்டு முறைகள்; நூலகங்கள் முதலியன;
  3. அவற்றில் பாடம் எடுக்கும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் தரம், திறமை, ஒழுக்கம், கட்டுப் பாடு போன்றவை;
  4. போதிக்கப் படும் பாடங்களின் தரம், உபயோகம், வேலைக்கு உதவும் தன்மை;
  5. மாணவ-மாணவியர் பாடங்களைப் படித்துப் புரிந்து கொள்லூம் திறன், கல்வி கற்கும் திறன் முதலியவை;
  6. பரீட்சை, சோதனை முறைகள், தேர்ந்தெடுக்கும் வகை, நெறிமுறை மாணவ-மாணவியர்களின் தராதரன், திறன் வெளிகொணரும் மற்றும் சோதிக்கும் வகையில் செம்மையாக செயல்படுதல்;
  7. படிப்புத் தவிர பொழுது போக்கு, விளையாட்டு முதலியவற்றில் ஈடுபடுத்தல், மனச்சுமை குறைத்தல் போன்றவை….

பாடம் எடுக்கும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் வன்முறையில் இறங்கக் கூடாது: இவற்றையெல்லாம் விடுத்து, பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் வளாகங்களில் கூட்டத்தைக் கூட்டி அரசியல் ரீதியில் ஆர்பாட்டம், போராட்டம், கூச்சல், குழபங்கள், சண்டைகள் முதலியவற்றை உண்டாக்கினால், படிக்கும் இடத்தின் தூய்மை மற்றும் சுற்றுப்புறங்களே சீரழிந்து விடுகிறது. தொடர்ந்து கவனிக்கும், பார்க்கும் மாணவ-மாணவியர்களுக்கு அதே போன்ற நிகழ்வுகளில் பங்கு கொள்ளத் தூண்டுதல்கள் உருவாகின்றன. வன்முறை போதிக்கப் பட்டு, நியாயப் படுத்தப் படுகிறது. ஏனெனில், அவற்றை துணைவேந்தர், முதல்வர், பாடம் எடுக்கும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் முதலியோரே ஈடுபடுகின்றனர். இங்கு கண்ணூர் சரித்திர மாநாட்டில் அதுதான் நடந்துள்ளது. ஆகவே, உண்மையினை மறைப்பதால், எந்த பிரயோஜனமும் இல்லை.

© வேதபிரகாஷ்

20-09-2022


[1] தமிழ்.ஒன்.இந்தியா, ஓயாத அலைகள்.. கேரளா ஆளுநரை வெளுத்தெடுத்த முதல்வர் பினராயி விஜயன்! முட்டாள் போல பேசுவதாக சாடல்!, By Mathivanan Maran, Published: Sunday, September 18, 2022, 18:23 [IST].

[2] https://tamil.oneindia.com/thiruvananthapuram/university-appointments-kerala-cm-pinarayi-vijayan-attacks-state-governor-arif-mohammed-khan-476403.html?story=1

[3] தினகரன், கண்ணூர் பல்கலை. துணைவேந்தர் மறு நியமனம்; பினராய் விஜயன் சட்டத்தை மீறி நேரடியாக தலையிட்டார்: கேரள கவர்னர் பரபரப்பு குற்றச்சாட்டு, 2022-09-20@ 00:16:45.

[4] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=800476

[5] தினமலர், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குசிக்கல்!,  Updated : செப் 20, 2022  02:47 |  Added : செப் 18, 2022  23:10.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3125873

கண்ணூர் சரித்திர மாநாட்டில் நடந்தது என்ன – கேரள கவர்னர்-முதலமைச்சர் மோதல் ஏன்? (1)

செப்ரெம்பர் 24, 2022

கண்ணூர் சரித்திர மாநாட்டில் நடந்தது என்னகேரள கவர்னர்முதலமைச்சர் மோதல் ஏன்? (1)

கேரள கவர்னர்முதலமைச்சர் மோதல் ஏன்?: கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும், முதல்வர் பினராயி விஜயனுக்கும் மோதல் முற்றியுள்ளது. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நீடித்து வருகிறது[1]. பிஜேபி இல்லாத மாநிலங்களின் முதல்வர்கள் சமீப காலங்களில் கவர்னருக்கு எதிரான மோதல் முறையை கடைபிடித்து வருகிறார்கள். மேற்கு வங்காளம், தில்லி, பஞ்சாப், மஹாராஷ்ட்ரா, கேரளா, தெலிங்கானா, தமிழ்நாடு என்று பல மாநிலன்களில் அப்போக்குக் காணப்படுகின்றது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பல்கலை ஒன்றின் பேராசிரியராக, முதல்வர் பினராயி விஜயனின் உதவியாளர் ராஜேஷின் மனைவி பிரியா நியமிக்கப்பட்டதில் சர்ச்சை எழுந்தது. இந்த நியமனத்துக்கு கவர்னர் ஆரீப் முகமது கான் எதிர்ப்பு தெரிவித்து நிராகரித்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், அந்த நியமனத்துக்கு தடை விதித்தது.

கவர்னருக்கு இருக்கும் அதிகாரத்தை நீக்கி சட்டதிருத்ததை உண்டாக்கினால், அதை கவர்னரே ஒப்புதல் அளிப்பார் என்பது மடத்தனம்: கேரள சட்டசபையில் சமீபத்தில் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில முதல்-மந்திரியே செயல்பட வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது[2]. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது[3]. ஆனால் இந்த சட்டதிருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்க போவதில்லை என கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார்[4]. கவர்னருக்கு இருக்கும் அதிகாரத்தை நீக்கி சட்டதிருத்ததை உண்டாக்கினால், அதை கவர்னரே ஒப்புதல் அளிப்பார் என்பது மடத்தனம். மேலும் இதில் அரசியல் நிர்ணய சட்டத்தின் மேலாதிக்கமும் இருக்கிறது. அதற்கு கட்டுப் பட்டு நடக்க வேண்டிய மாநில அரசுகள் சட்டங்களை புரிந்து கொள்ளாமல், யதேச்சதிகாரமாக செயல்படுவது, அரசியல் செய்வது போன்றவை மக்களுக்கு பலனை தராது. எந்த மாநிலமும், தனித்து இயங்க முடியாது. இந்திய மக்கள் அனைவரும், அனைத்து மாநிலங்களை சார்ந்து தான், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

மசோதா பற்றிய ஆளுனரின் விளக்கம்: கவர்னர் அரசின் பல்வேறு நடவடிக்கைகளை விமர்சித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:- “கவர்னர் தான் மாநில மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். எனவே கவர்னரின் அதிகாரத்தை மாநில அரசால் குறைக்க முடியாது. கடந்த 2019-ம் ஆண்டு கண்ணூர் பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு சென்ற என் மீது தாக்குதல் முயற்சி நடந்தது. அப்போது போலீசார் அவர்களின் கடமையை செய்யவிடாமல் முதல்மந்திரியின் தனி அலுவலர் தடுத்துள்ளார். இது எதிர்ப்பாளர்களின் குரலை ஒடுக்க அரசு முயற்சிப்பதை காட்டுகிறது,” என்றார். ஆகவே, கவர்னரின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதாவை, அவரிடமே அனுப்பினால், நிச்சயமாக ஒப்புதல் கிடைக்காது. இது மத்திய அரசுடன் காட்டும் மோதல் போக்கைத் தான் காட்டுகிறது, வெளிப்படுகிறது. இதனால், மத்திய-மாநில அரசுகளின் நட்புறவு செம்மையாக இருக்காது.

மாநில முதல்வர்கவர்னர் மோதல் போக்கினால், 2019ம் ஆண்டில் நடந்ததை எடுத்துக் காட்டி, பேசியது: கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லி சென்ற கவர்னர், அங்கு செய்தியாளர்களை சந்தித்தபோது, கண்ணூர் பல்கலைக்கழகத்தில் 2019-ம் ஆண்டு நடந்த வரலாற்று மாநாட்டில் தன்னை தாக்குவதற்கு துணை வேந்தர் கோபிநாத் ரவீந்திரன் தலைமையில் சிலர் திட்டமிட்டதாகவும், குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவான கருத்துக்களை தான் பேசியபோது வரலாற்று ஆசிரியர் இர்பான் ஹபீப் தனது பேச்சுகுறித்து கேள்வி எழுப்ப முயன்றதாகவும், அதைத் தொடர்ந்து தன்னை தாக்க திட்டமிட்டதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இதற்காக டெல்லியை மையமாகக்கொண்டு நடந்த சதித்திட்டத்தில் துணை வேந்தரும் அங்கமாக இருந்தார் எனவும், அதுபற்றி போலீஸின் கவனத்துக்கு கொண்டுசென்ற பிறகும், விசாரணைக்கு துணை வேந்தர் ஒத்துழைக்கவில்லை எனவும் கவர்னர் ஆரிப் முகமது கான் குற்றம்சாட்டியிருந்தார்.

கவர்னர் கம்யூனிஸ சித்தாந்தத்திற்கு எதிராக செயல்படுகிறார்முதலமைச்சர் குற்றம் சாட்டுவது; கவர்னர் ஆரிப் முகமது கானின் குற்றச்சாட்டுக்கு பதிலடி அளிக்கும் வகையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் பங்கேற்ற முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:- “கவர்னர் பதவி என்பது அரசமைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட பதவி. அப்பதவியை தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தக்கூடாது. மாநிலத்தில் செயல்படும் எதிர்கட்சிகளை போல கவர்னர் நடந்து கொள்கிறார். ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ஆதரவாகவே அவர் நடந்து கொள்கிறார். கம்யூனிச கொள்கைக்கும், அதன் சித்தாந்தத்திற்கும் எதிராகவே நடந்து கொள்கிறார். கேரளத்தில் கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார். ஆனால், 2019ல் இந்திய வரலாற்றுப் பேரவை மாநாட்டின் துவக்க விழாவின் போது நடந்த விவகாரங்களைப் பற்றி மூச்சு விடவில்லை.

கவர்னர் வீடியோவை ஆதாரமாகக் காட்டியது: இதற்கிடையே முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான ஆவணங்களை வெளியிடுவதாக கவர்னர் நேற்று முன்தினம் 17-09-2022 அன்று கூறியிருந்தார்[5]. நேற்று 18-09-2022 அன்று கவர்னர் ஆரிப் முகமது கான் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்[6]. அதற்கு முன்பாக கண்ணூர் பல்கலைகழக வரலாற்று மாநாட்டில் நடந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோவை கவர்னர் மாளிகை தயாரிக்கவில்லை என்றும் மாநில அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் பல்வேறு செய்தி ஊடகங்களில் வெளியான வீடியோ என்ற குறிப்பும் தெரிவிக்கப்பட்டது. அதில், அவர் பேசுவது, இடையில் மாநாட்டில் கலந்து கொண்ட சரித்திராசிரியர்கள் கத்துவது, ஆர்பாட்டம் செய்வது, இர்பான் ஹபீப் என்பவர், மேடையிலேயே, இடைமறித்து கிண்டல் அடிப்பது, அவரை நோக்கி வேகமாக கையை நீட்டிக் கொண்டு வருவது, கவர்னர் பாதுகாவலர் தடுப்பது…..முதலியவை தெளிவாக பதிவாகியுள்ளன. இவையெல்லாம் சம்பந்தப் பட்ட சரித்திராசிரியர்களின் அநாகரிகத்தையே வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியன் இஸ்டரி காங்கிரஸ் / இந்திய வரலாற்றுப் பேரவை மாநாட்டில் கம்யூனிஸ்ட்களின் அடாவடித் தனம்: பின்னர் கவர்னர் ஆரிப் முகமது கான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கண்ணூர் பல்கலைக்கழக வரலாற்று மாநாட்டில் நடந்த பிரச்னை ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் குற்றமாகும். போலீஸின் முன்பு வைத்து அந்த சம்பவம் நடந்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு எதிரான தாக்குதல் நடந்த சமயத்தில் அதை தடுக்கமுயன்ற போலீஸாரை ஒரு அரசியல் தலைவர் தடுத்து நிறுத்தினார். அவர் முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகத்தை மையமாகக்கொண்டு செயல்படுபவர். எனக்கு எதிராக போராடியவர்களுக்கு எதிராக போலீஸார் நடவடிக்கை எடுக்க முயன்ற சமயத்தில் மேடையில் இருந்த கே.கே.ராகேஷ் எழுந்து போலீஸை தடுத்தார். கவர்னரை தாக்குவதும், தடுப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். தாமாக முன்வந்து போலீஸ் இதில் வழக்கு எடுக்க முடியும். போராட்டகாரர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு பதாகைகளுடன் வந்திருந்தனர். கண்ணூர் பல்கலைகழகத்தில் விதியை மீறி நியமனங்களுக்காக பினராயி விஜயன் என்னை அணுகினார். விதிமுறைகளை மீறி பல நியமனங்கள் நடந்துள்ளன,” என்றார்[7]. இதில் கே.கே.ராகேஷ் என்பவர் முதல்வர் பினராயி விஜயனின் உதவியாளராக செயல்படுபவர்[8]. கவர்னரின் குற்றச்சாட்டுகள் ஆளும் சி.பி.எம் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கிடையே கண்ணூர் பல்கலைகழகத்தில் மறு நியமனம் வேண்டும் என முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதிய மூன்று கடிதங்களையும் கவர்னர் ஆரிப் முஹமது கான் வெளியிட்டார்.

© வேதபிரகாஷ்

20-09-2022


[1] மாலைமுரசு, கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கம்யூனிச சித்தாந்தத்துக்கு எதிரானவர்பினராயி விஜயன் பரபரப்பு பேச்சு, ByMaalaimalar20 செப்டம்பர் 2022 12:54 PM.

[2] https://www.maalaimalar.com/news/national/pinarayi-vijayan-says-kerala-governor-arif-mohammad-khan-against-communist-ideology-514553

[3] தமிழ்.ஏசியாஎட்.நியூஸ், governor of kerala: கேரள ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் சட்டத்திருத்தம்: பினராயி விஜயன் அமைச்சரவை ஒப்புதல், Pothy Raj, Trivandrum, First Published Aug 17, 2022, 1:51 PM IST

[4]  https://tamil.asianetnews.com/india/cabinet-approves-bill-to-limit-kerala-governor-s-role-in-v-c-postings–rgr374

[5] ஏபிபி.லைவ், செய்தியாளர் சந்திப்பில், பகீர் ஆதாரங்களை வெளியிட இருக்கிறாரா கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்?, By: சுதர்சன், Published at : 19 Sep 2022 10:28 AM (IST) , Updated at : 19 Sep 2022 10:28 AM (IST).

[6] https://tamil.abplive.com/news/india/guv-khan-calls-presser-likely-to-release-evidence-against-kerala-cm-74132

[7] விகடன், கடிதம், வீடியோ வெளியிட்ட கவர்னர்காட்டமான பினராயி விஜயன்! – கேரளாவில் நடப்பது என்ன?, சிந்து ஆர், Published: 20-09-2022-Today at 12 PM; Updated: Today at 12 PM.

[8] https://www.vikatan.com/government-and-politics/politics/kerala-governor-vs-kerala-cm-whats-happening-in-state-politics

2021 தங்கம் கடத்தல் வழக்கு, பிரனாய் விஜயனுக்கு தொடர்பு- பிலீவர்ஸ் சர்ச்சுக்கும் சம்பந்தம், ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டு

ஜூன் 11, 2022

2021 தங்கம் கடத்தல் வழக்கு, பிரனாய் விஜயனுக்கு தொடர்புபிலீவர்ஸ் சர்ச்சுக்கும் சம்பந்தம், ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டு

2021 தங்கம் கடத்தல் வழக்கு: கடந்த ஆண்டு 2021 ஜூலை 5ஆம் தேதி கேரள மாநிலம், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் கடத்தி வரப்பட்ட ரூ. 15 கோடி மதிப்பிலான தங்கம் சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது[1]. இதையடுத்து, சுங்கத் துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் இந்த விவகாரத்தை தனித்தனியாக விசாரித்து வருகின்றன[2]. இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியாக ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஆண்டு 2021 ஜூலை 11ஆம் தேதி பெங்களூரில் கைது செய்தனர்[3]. இந்த வழக்கில் தொடர்புடைய கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் எம்.சிவசங்கர், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் மற்றொரு முன்னாள் ஊழியர் சரித் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்[4]. மேலும், சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின்கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தங்கம் கடத்தில் பிரனாய் விஜயனுக்கு தொடர்புஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டு: திருவனந்தபுரத்தில் உள்ள யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கு விவகாரம் இப்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தங்கம் கடத்தல் வழக்கில் 16 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்த ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனைக் குறிவைத்து பல குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை 07-06-2022 கொச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்வப்னா சுரேஷ், தனது உயிருக்கு ஆபத்து என்பதால் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன், அவரின் மனைவி கமலா, மகள் வீணா ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகவும், திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரகத்திலிருந்து பிரியாணி பாத்திரத்தில் உலோகம் போன்ற பொருள்கள் முதல்வரின் க்ளிஃப் ஹவுஸுக்குச் சென்றதாகவும் கூறி பரபரப்பைக் கிளப்பியிருந்தார். தங்கம் கடத்துவது தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு துபாயில் பினராயி விஜயனுக்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், முதல்வர் பினராயி விஜயன் சார்பில் தன் நண்பரான ஷாஜ் கிரண் தன்னை மிரட்டியதாகவும் கூறியிருந்தார்.

பிலீவர்ஸ் சர்ச்சுக்கும் பிரனாய் விஜயனுக்கு தொடர்பு: அதேசமயம் ஷாஜ் கிரண் அதை மறுத்திருந்தார். இந்த நிலையில் ஷாஜ் கிரண் தன்னுடன் பேசும் ஆடியோ ஒன்றை 07-06-2022 அன்று பாலக்காட்டில் வைத்து வெளியிட்டார் ஸ்வப்னா சுரேஷ். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வப்னா சுரேஷ், ‘எனது வாக்குமூலத்தால் ஒன்றாம் நம்பர் வி.ஐ.பி கோபமாக இருப்பதாக ஷாஜ் கிரண் கூறியிருந்தார். அவர் கூறிய ஒன்றாம் நம்பர் வி.ஐ.பி முதல்வர் பினராயி விஜயன்தான். முதல்வர் பினராயி விஜயன், சி.பி.எம் கேரள மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் ஆகியோர் பிலீவர்ஸ் சர்ச் (Believers church) மூலம் அமெரிக்காவில் ஃபண்டுகளைக் கொண்டு சேர்த்துள்ளனர்[5]. அதனால்தான் பிலீவர்ஸ் சர்ச்சுக்கு எஃப்.சி.ஆர்.ஏ [(Foreign Contribution (Regulation) Act (FCRA) ஃபாரின் கான்ட்ரிபியூஷன் ரெகுலேசன் ஆக்ட்)] ரத்துசெய்யப்பட்டது[6]. அரசியல் பலமிக்க ஷாஜ் பினாமியாக செயல்பட்டார்[7],’ இவ்வாறு பல விவகாரங்களை ஸ்வப்னா சுரேஷ் பேட்டியில் வெளியிட்டார்[8]. இந்த சர்ச் கே.பி.ஹோஹன்னன் (K P Yohannan) என்கிற சர்ச்சைக்குரிய பாதிரியின் சர்ச்சாகும்.

ஷாஜ் கிரண் என்னை மிரட்டுகிறார்:  ஸ்வப்னா சுரேஷ் சொன்னது, ‘பிலிவெர்ஸ் சர்ச்சுக்கு (Believers Church) நெருக்கமானவர்தான் ஷாஜ் கிரண்[9]. மேலும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் நெருக்கமானவர் ஷாஜ் கிரண்[10]. எனக்கு சிவசங்கர் ஐ.ஏ.எஸ் மூலம்தான் ஷாஜ் கிரண் அறிமுகம் ஆனார். லேண்ட் புரோக்கர் என தன்னைக் கூறிக்கொள்ளும் ஷாஜ் கிரண், பல கம்பெனிகளுக்கு இயக்குநராக உள்ளார்[11]. பவர்ஃபுல் மனிதரான ஷாஜ் கிரண் என்னை மனதளவில் தளர்த்த முயன்றார். நான் உயிருக்குப் பயந்துதான் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தேன். என் பின்னால் வேறு யாரும் இல்லை,” என்றார்[12]. கேரளாவில் இவ்வாறு அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் என்று சேர்ந்து ஊழல்களில், குற்றங்களில் ஈடுபட்டு வருவது திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், மெத்தப் படித்தவர்கள், அதிகம் படித்தவர்கள், இந்திய அரசியலில் எப்பொழுதும் ஆதிக்கத்தைக் கொண்டுள்ள கேரளத்தவர்கள் இவ்வாறு சம்பந்தப் படுவதும் நோக்கத் தக்கது.

ஸ்வப்னா பின்னால் அரசியல் சதி உள்ளது: கேரள முதல்வர் பினராயி விஜயன். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஷாஜ் கிரண், “ஸ்வப்னா சுரேஷ் ஆடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளார். எடிட் செய்யாத ஆடியோவை நான் விரைவில் வெளியிடுவேன். எனக்கும் முதல்வருக்கும் சம்பந்தம் இல்லை,” என்றார். மேலும் சி.பி.எம் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன், “முதல்வரையும், அவரின் குடும்பத்தையும் விமர்சிப்பதை லட்சியமாகக் கொண்டு ஸ்வப்னா செயல்படுகிறார். இதன் பின்னால் அரசியல் சதி உள்ளது,” என்றார். ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கேரளாவில் போராட்டங்களை தீவிரமாக்கி வருகிறது. இருப்பினும், ஸ்வப்னா சுரேஷுக்கு உண்மையில் எந்த அரசியல் கட்சியும் உதவுவதாகத் தெரியவில்லை. முன்னர் சரிதா நாயர் பிரச்சினை, வழக்கு கூட பெரிதாகப் பேசப் பட்டது, ஆனால், அடங்கி விட்டது. ஆக, உண்மையில் தங்கக் கடத்தல் நடந்துள்ளது எனும்போது, அரசியலாக்கி திசைத் திருப்பவதால், கடத்தல், கள்ளப்பணம், குற்றமீறல்கள் முதலியவை மறைந்து விடாது.

கேரள ஊழல்களை, சட்டமீறல்களை, குற்றங்களை மறைப்பதேன்?: கே.பி.ஹோஹன்னன் (K P Yohannan) 2012 முதல் 2017 வரை பல சட்டமீறல்களில் ஈடுபட்டுள்ளார்[13]. இவையெல்லாம் நீதிமன்ற தீர்ப்புகளிலிருந்தே அறிந்து கொள்ளலாம்[14]. இருப்பினும், பினராயி விஜயன், பி.ஜே.குரியன், மாத்யூஸ் தாமஸ் என்று பல அரசியல்வாதிகளுடன் உலா வந்துள்ளார், வருகிறார்[15]. அந்நிய நாட்டு கொடைகளில் கோடிகளில் மோசடி செய்தலால், கோடிகள் தண்டமாகக் கட்டி, வழக்குகளை முடித்துக் கொண்டுள்ளார்[16]. ஆனால், இச்செய்திகளை எல்லாம் வந்த வேகத்துடன் மறைந்து விட்டன. ஊடகக் காரர்களும் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஊழலை எதிர்ப்போம் என்றெல்லாம் பீழ்த்திக் கொண்டாலும், இதை மறைப்பதில் ஏன் ஒத்துழைத்தார்கள் என்று தெரியவில்லை. ஊழலில் இந்தியா முன்னணியில் உள்ளது என்றால், அதனை தாராளமாக, சந்தோஷமாக, தலைப்புச் செய்திகளாகப் போடுவார்கள். இதில் உள்ள சித்தாந்தத்தைத் தான் இந்தியர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

© வேதபிரகாஷ்

11-06-2022


[1] ஜீ.நியூஸ், தங்கக் கடத்தலில் முதலமைச்சருக்கும் பங்கு உண்டுஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம், Written by – Chithira Rekha | Last Updated : Jun 7, 2022, 09:02 PM IST

[2] https://zeenews.india.com/tamil/india/swapna-suresh-gives-statement-that-pinarayi-vijayan-involves-in-gold-smuggling-396495

[3] நியூஸ்.7.தமிழ், தங்கம் கடத்தலில் பினராயி விஜயனுக்கும் பங்கு: ஸ்வப்னா சுரேஷ், by Web Editor, -ம.பவித்ரா, June 8, 2022.

[4] https://news7tamil.live/gold-smuggling-case-accused-makes-startling-claims-about-kerala-cm-pinarayi-vijayan.html

[5] விகடன், பினராயி விஜயனின் ஃபண்டுகள் பிலீவர்ஸ் சர்ச் மூலம் அமெரிக்காவுக்குப் போகின்றன” – ஸ்வப்னா சுரேஷ், சிந்து ஆர், Published: 11-06-2022 at 6 AM; Updated:!1-06-2022 at 6 AM.

[6] https://www.vikatan.com/news/india/swapna-suresh-again-complain-against-kerala-cm-in-gold-smuggling-case

[7] Mathrubhumi, ‘He will not sit idle if you drag his daughter into this,’ threatened Shaj, says Swapna, 10 June 2022, 04:42 PM IST……

[8] The funds of Kodiyeri Balakrishnan and Pinarayi Vijayan are moved to the US through the accounts of Believers Church. It was the reason why the government took action against them under Foreign Contribution (Regulation) Act (FCRA),” she said soon after sharing audio clips by holding a press meet at her residence in Palakkad. Swapna added that Shaj was a Benami of Chief Minister.

https://english.mathrubhumi.com/news/kerala/swapna-suresh-shaj-kiran-audio-clip-release-cm-pinarayi-vijayan-gold-smuggling-case-1.7594134

[9]  ஏபிபி.லைவ், சூட்கேசில் பணத்தை எடுத்துச்சென்றார் பினராயி; மனைவி மகளுக்கும் தொடர்பு” – ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு பேட்டி, By: பேச்சி ஆவுடையப்பன் | Updated at : 08 Jun 2022 08:33 AM (IST), Published at : 08 Jun 2022 08:33 AM (IST).

[10] https://tamil.abplive.com/news/india/kerala-gold-smuggling-case-swapna-suresh-alleges-pinarayi-vijayan-55482

[11] எம்.டி.நியூஸ், பினராயி விஜயனின் ஃபண்டுகள் பிலிவெர்ஸ் சர்ச் மூலம் அமெரிக்காவுக்கு போகின்றன” – ஸ்வப்னா சுரேஷ், admi, Jun 11, 2022 – 11:30.

[12] https://mdnews.live/tamil/binarai-vijayans-funds-go-to-us-through-believers-church-swapna-suresh

[13] Vedaprakash, Gospel for Asia, Believers’ Church and Yohannan: Why the Pentecostal Church was involved in illegal money transactions even in USA? (1), 09-11-2020.

[14] https://indiainteracts.wordpress.com/2020/11/09/gospel-for-asia-believers-church-and-yohannan-why-the-pentecostal-church-has-been-nurtured-in-spite-of-its-violations-of-law-of-the-land-1/

[15] Vedaprakash, Gospel for Asia, Believers’ Church and Yohannan: Why the Pentecostal Church was involved in illegal money transactions even in USA? (2), 09-11-2020.

[16] https://indiainteracts.wordpress.com/2020/11/09/gospel-for-asia-believers-church-and-yohannan-why-the-pentecostal-church-was-involved-in-illegal-money-transactions-even-in-usa-2/