சீன ஊடுருவல்கள், இந்திய விரோத வேலைகள் முதலியவற்றை எதிர்க்காத இந்திய கம்யூனிஸ்டுகள்!

சீன ஊடுருவல்கள், இந்திய விரோத வேலைகள் முதலியவற்றை எதிர்க்காத இந்திய கம்யூனிஸ்டுகள்!

சீனாவின் தீவிரவாதக் குழு இந்தியாவில் நுழைந்து மற்ற தீவிரவாதிகளுடன் சேர்ந்து செயல்படுவது

இந்திய கம்யூனிஸ்டுகளின் போலித்தனம், துரோகம்: இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு என்றுமே பிரச்சினையாக இருப்பது, தமது மனசாட்சி குத்திக் காட்டுவது, மற்றவர்கள் (குடும்பத்தாரையும் சேர்த்து) சந்தேகப்படவைப்பது அவர்களுடைய எல்லைகள் கடந்த சீனா மற்றும் ரஷ்யா நாடுகள் மீதுள்ள பாசம், நேசம் பந்தங்கள்தாம். குடங்குளத்தை எதிர்க்கும் கோஷ்டிகள் இந்த கூடாநட்பை எதிர்ப்பதில்லை. சீனாவைப்பொறுத்த வரையில், இந்தியாவிற்கு எதிராகத்தான் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள இந்திய பகுதிகளில் சீனத்துருப்புகள், ராணுவ வாகனங்கள், ஒற்றர்ப்படைகள் அதிகமாகவே உள்ளன, அவை சமயம் வரும் போது, இந்தியாவில் நுழைந்து இந்திய-எதிர்ப்பு வேலைகளை செய்யத்தான் செய்கின்றன. இருப்பினும் இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு இவையெல்லாம் தெரிந்திருந்தும், தெரியாத மாதிரி காட்டிக் கொண்டு, சித்தாந்தம் பேசி, புதியப் பிரச்ச்சினைகளைக் கிளப்பி அதில் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருப்பார்கள். இவ்விஷ்யத்தில் கம்யூனிஸ்டுகளால் இந்தியாவிற்கு ஒரு நலனும் இல்லை மாறாக, உள்நாட்டிலேயே எதிரிகளை வைத்துள்ள நிலைத்தான் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை மதிக்காத சீனா:  “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், சீனா தன் ஆதிக்கத்தை அதிகரிக்கக் கூடாது’ என, இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அதை அந்தக் கம்யூனிச நாடு கண்டுகொள்ளவில்லை[1]. படிப்படியாக அங்கு தன் ஆதிக்கத்தை அதிகரித்து வருகிறது. இப்போது, ராணுவ வீரர்கள் உட்பட நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில், உள்கட்டமைப்பு திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் வடபகுதி எல்லையில், சீன ராணுவத்தினரின் அத்துமீறல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. இந்தியா எவ்வளவோ கேட்டுக் கொண்டும், சீன ராணுவத்தினரும், சீன அரசும், அதை கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அதேபோல், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், எந்தவிதமான உள்கட்டமைப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம்’ என, இந்திய அரசு கூறி வந்தாலும், அதை சீன ராணுவத்தினர், “செவிடன் காதில் ஊதிய சங்காக’ கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.
சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் ஊடுருவல்: சோனியா கைப்பாவைகள் உண்மையை மறைத்தாலும், கடந்த மூன்று மாதங்களில் 40 தடவை இந்திய எல்லைகளில் சீனத்துருப்புகள் ஊடுருவியுள்ளார்கள் என்று உள்துறை அமைச்சகத்திற்கு தெரிந்திருக்கிறது[2]. லெஹ்ஹில் உள்ள மக்கள் அத்தகைய ஊடுருவல்களை பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்[3]. ஒமர் அப்துல்லாவும் ஒப்புக் கொண்டுள்ளார்[4]. ஆனால் காங்கிரஸ்காரர்கள், இப்பொழுதைய ஆட்சியாளர்கள் இதைக் கண்டுக்கொள்வதேயில்லை. தற்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளில், சீன ராணுவ வீரர்கள் பலர் உட்பட நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சாலைகள் அமைப்பது உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இத்தகவலை இந்திய ராணுவத் தளபதி வி.கே.சிங் கூறியுள்ளார். டில்லியில் ராணுவம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், “ராணுவ வீரர்கள் எனக் கூறப்படுபவர்கள் சீன அரசின் மக்கள் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்’ என்றும் மேலும் கூறினார்.  பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில், சீனர்கள் இத்தனை பேர் உள்ளனர் என, முதன்முறையாக எண்ணிக்கை அடிப்படையில் ராணுவத் தளபதி தகவல் தந்துள்ளது இதுவே முதல் முறை. “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மூலமாக, பாகிஸ்தானையும், சீனாவையும் இணைக்கும் சாலைப் பணிகள் மற்றும் ரயில் பாதைப் பணிகளில் சீனர்கள் ஈடுபடுவதால், எதிர்காலத்தில், இந்தியா – சீனா இடையே பகைமை உருவானால், அது இந்தியாவிற்கு பெரும் ஆபத்தாக முடியும். அத்துடன் பாகிஸ்தான் படைகள் எந்தவிதமான சிரமமும் இன்றி, விரைவில் எல்லையை வந்தடைந்து விடும்’ என, கடந்த ஏப்ரல் மாதமே, வடக்கு பிராந்திய ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பாமெய்க் எச்சரித்துள்ளார். அதனால், இந்திய அரசு இந்த விஷயத்தில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
வழக்கம் போல பா.ஜ.கா எதிர்ப்பு – காங்கிரஸ் மௌனம் – கம்யூனிஸ்டுகளின்  துரோகமான போக்கு: இந்த மாதிரியான விஷயங்களை பி.ஜே.பி தான் எடுத்துச் சொல்ல வேண்டும்[5], எதிர்க்க வேண்டும், ஆனால் மற்ற கட்சிகள் நல்ல பேரை வாங்கிக் கொள்ள வேண்டும், நமது நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு என்று எதைப்பற்றியும் கவலை இல்லை. “பாகிஸ்தான் – சீனா இடையேயான நெருக்கம் அதிகரித்து வருவதால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், சீன ராணுவத்தினர் உள்ளதால், சீனா தொடர்பான கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என, பாரதிய ஜனதா கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக, பா.ஜ., தகவல் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் கூறுகையில், “பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன ராணுவத்தினர் உள்ளதாக, இந்திய ராணுவ தளபதி கூறியுள்ளது கவலை தரும் விஷயம். ஹக்கானி விவகாரத்தில், பாகிஸ்தான் – அமெரிக்கா இடையேயான உறவு சமீப காலமாக சீர்குலைந்து வரும் நிலையில், இது போன்ற சூழ்நிலை உருவாவது மிகவும் ஆபத்தாக முடியும். நிலைமை இப்படி மாறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையிலும், மத்திய அரசு சீனாவுக்கு சாதகமாக பேசி வருவது சரியல்ல. இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னையை சீன அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்; அந்நாடு தொடர்பான கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும்,” என்றார்.

சீனாவுடனான வெளியுறவுக் கொள்கையைப் பற்றி பரிசீலினை செய்யவேண்டும் – பீ.ஜே.பி சொல்வது எடுபடுவதில்லை: சீனாவுடனான வெளியுறவுக் கொள்கையைப் பற்றி பரிசீலினை செய்யவேண்டும் என்று பீ.ஜே.பி எடுத்துச் சொன்னாலும் கேட்பார் இல்லை[6]. அதாவது ஊடகங்களின் எதிர்மறை விமர்சனங்களினால், பீ.ஜே.பி சொல்லும் நல்ல விஷயங்கள், குறிப்பாக நாட்டின் நலன், பபதுபாப்பு முதலியவற்றைப் பற்றியவைகள் பற்றி அது சொல்வது மக்கள் கவனிப்பதாக இல்லை. ஏதோ மதவாதக் கட்சி சொல்கிறது என்று இருந்து விடுகிறார்கள் போலும்! அதற்கும் மேலாக, சீனாவின் பொருட்களை வாங்கி இந்தியாவில் விற்று வரும் காங்கிரஸ் முதலிய கட்சிகளின் வியாபாரிகளும் விரும்பவில்லை[7]. சீனாவில் தொழிற்சாலைகளை வைத்துள்ள இந்திய முதலாளிகளும் தங்களது மில்லின்கள் போய்விடுமே என்று மறைமுகமாக சீனாவை ஆதரித்து வருகிறார்கள்.

பி.எல்,ஏ.வின் தீவிரவாதிகளுடான தொடர்பு[8]: இந்திய ராணுவ தளபதியே பி.எல்.ஏ இருக்கிறது என்று சொன்னபிறகும்[9], அதை மறைத்து, காஷ்மீரில் ஒரு ஆள் கொல்லபொபட்டுவிட்டான் என்று திசைத்திருப்பி மறைக்கப் பார்க்கிறார்கள். தில்லி போலீஸார் சீன ஊடுருவல்காரர்கள், குறிப்பாக ஒரு “கொரில்லா படைக்காரன்” ஆயுதங்கள் விற்றுவரும் கூட்டத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர். சீனமக்கள் விடுதலை ராணுவம் – பி.எல்.ஏ (People’s Liberation Army – Irengbam Chaoren) என்ற அமைப்பின் இரண்டு வீரர்களை கடந்த வாரத்தில் இந்தியா கைது செய்து விசாரித்ததில், அது சீனாவில் இருந்து கொண்டு, இந்தியாவில் மறைவாக வேலை செய்து வருகிறது என்ற்ய் ஒப்புக்க்கொண்டனர். தடை செய்யப் பட்ட பி.எல்.ஏ 1,500க்கும் மேலானவர்களுடன், பா.ஆ,இ.வில் புகுந்து லஸ்கர்-இ-தொய்பா, ஜம்மு-காஷ்மீரம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வரும் தீவிரவாத குழுக்களுடன் சேர்ந்து இந்தியாவிற்கு எதிராக வேலை செய்து வருவதாகவும் தெரிவித்தனர்[10]. பாகிஸ்தானிம் மதவாத-தீவிரவாத லட்சியங்களை[11] எவ்வளவு எடுத்துக் காட்டி விளக்கினாலும், இந்திய செக்யூலரிஸ அரசியல்வாதிகளுக்கு விளங்கவே விளங்காது போலும்!

மாவோயிஸ்டுகளுடான தொடர்பு: இந்த பி.எல்.ஏ PLA மற்றும் ஐ.எஸ்.ஐ ISI சேர்ந்து கொண்டு மாவோயிஸ்ட்களுக்கு பணம் மற்றும் ஆயுதங்களை சப்ளை செய்து வருகின்றன. “திட்டமிட்ட ஒருங்கிணைப்பு முன்னணி” (Strategic United Front) என்ற பெயரில் இணைந்து இந்தியாவிற்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. நக்சலைட்டுகள் உள்ள பகுதிகளில் அவர்களுடன் சேர்ந்து கொண்டு, பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸாரைக் கொல்வதே இவர்களுடைய வேலையாக இருக்கிறது. சந்தேகம் ஏற்படாமல் இருக்க அவர்கள் சீன எல்லைகளை ஊடுருவப் பயன் படுத்திக் கொள்கின்றனர் மற்றும் இந்து-முஸ்லீம் பெயர்களை சேர்த்து வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். அக்டோபர் 1, 2011 அன்று, பாஹர்கஞ் ஓட்டலில் பிடிப்பட்டவர்களின் பெயர்கள் என். திலிப் சிங் (51) மற்றும் அருண் குமார் சலாம் (36). மாவோயிஸ்டுகளுக்கு மயன்மாரில் நடத்தப் பட்டு வரும் ராணுவ பயிற்சி முகாம்களைப் பற்றிய வரைப்படங்கள், விவரங்கள் அவர்களிடமிருந்து கைப்பற்ற்றப் பட்டன[12].

உள்ளூர்வாசிகள்-சொந்தக்காரர்கள் உதவுவது: கடந்த ஆண்டுகளிலேயே, அத்தகைய முகாம்கள் நடப்பதற்கான புகைப்பட அத்தாட்சிகள் இந்திய ராணுவத்திற்குக் கிடைத்துள்ளன. அத்தகைய பயிற்சி முகாம்கள் ஜார்க்கண்ட் மற்றும் ஒரிசா காடுகளிலும் நடைப் பெற்று வருகின்றன. நேபாளத்தில் உள்ள மோயோயிஸ்ட்களும் இதர்கு உதவுகிறார்கள். இவ்விதமாக ஆயுதங்கள், பணம் மற்ற விவகாரங்கள் நேபாளம், பா.ஆ,இ, வழியாக மயன்மார் எல்லைகளுக்குச் செல்கின்றன. பங்களாதேச தீவிரவாதிகளும் இதற்கு உதவுகிறார்கள். இத்திவிரவாதிகளுக்கு அதிகமான பணம் கிடைப்பதால், அவற்றை குடும்பத்தாருக்குக் கொடுத்து விட்டு, அவர்கள் வியாபாரம், வீடுகள் என்று வசதியான வாழ்க்கை வாழும் நிலையில், இத்தீவிரவாதிகள் இறப்பதற்கும் அஞ்சாமல் வேலை செய்து வருகின்றனர். அவ்வாறு வசதியாக வாழும் உள்ளூர்வாசிகள் தாம் இவர்களுக்கு பெருமளவில் உதவி வருகிறார்கள். அடிபட்டவர்கள் தாராளமாக வந்து, ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைப் பெற்று, குடும்பத்தாருடன் இருந்து விட்டுச் செல்கின்றனர்.

வேதபிரகாஷ்

08-10-2011


[1] தினமலர்,பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பு, அக்டோபர் 06,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=326814

[7] இதில் முஸ்லீம்கள், இந்துக்கள் சேர்ந்தே வேலை செய்து வருகிறார்கள். நேபாளம், வங்காளதேசத்தவர்கள் தாம் கோடிக்கணக்கில் வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால், இந்திய பொருஉளாதாரம் சீரழிந்து வருகிறது. கூடவே, ஐ.எஸ்.ஐ இந்திய ரூபாய்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டும் உபயாமாக வேலை செய்து வருவதையும் காணலாம்.

[9] The Indian security establishment is becoming increasingly concerned about the presence of around 4,000 Chinese construction personnel, including combat engineers from the People’s Liberation Army (PLA) in Pakistan-occupied Kashmir, even as infiltration levels across the Line of Control into J&K have recorded a sharp jump in recent days.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

3 பதில்கள் to “சீன ஊடுருவல்கள், இந்திய விரோத வேலைகள் முதலியவற்றை எதிர்க்காத இந்திய கம்யூனிஸ்டுகள்!”

  1. பாகிஸ்தான் எல்லையில் கோடிக்கணக்கில் போதைப் பொருள் பிடிப்பட்டது: ஜிஹாதிகள் போதை மருந்துடன் வ Says:

    […] [7] https://indiancommunism.wordpress.com/2011/10/08/chinese-incursions-anti-indian-activities-communists… […]

  2. பாகிஸ்தான் எல்லையில் கோடிக்கணக்கில் போதைப் பொருள் பிடிப்பட்டது: ஜிஹாதிகள் போதை மருந்துடன் வ Says:

    […] [7] https://indiancommunism.wordpress.com/2011/10/08/chinese-incursions-anti-indian-activities-communists… […]

  3. பாகிஸ்தான் எல்லையில் கோடிக்கணக்கில் போதைப் பொருள் பிடிப்பட்டது: ஜிஹாதிகள் போதை மருந்துடன் வ Says:

    […] [7] https://indiancommunism.wordpress.com/2011/10/08/chinese-incursions-anti-indian-activities-communists… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: